ஒரே நாளில் மாறிப்போன வாழ்க்கை! ஒரே நொடியில் கணவனுக்கு ஏற்பட்ட கொடூர நிலையால் பிச்சை எடுக்கும் நிலை! கலங்கும் வினோதினி!

பிரபல சீரியல் நடிகை வினோதினி தனது கணவனுக்கு ஏற்பட்ட விபத்திற்கு பிறகு தான் பட்டுவரும் கஷ்டங்களையும் பாதிப்புகளையும் பற்றியும் நெஞ்சை உறைய வைக்கும் வகையில் கூறியுள்ளார்.


நடிகை வினோதினி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன் கணவர் வாகனம் ஓட்டிச் செல்லும்போது எதிர்திசையில் ராங் ரூட்டில் வந்த வாலிபர் தனது கணவர் மீது மோதியதால் அவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

கிட்டத்தட்ட 12 நாட்கள் அவர் CCU எனப்படும் கிரிட்டிக்கல் கேர் யூனிட்டில் வைக்கப்பட்டிருந்தார். அந்த பன்னிரண்டு நாட்களும் அவர் சுயநினைவோடு இல்லாமல் இருந்தார். நான் மருத்துவமனையில் இருந்து விட்டு இரவு வீட்டுக்கு வரும்பொழுது எனது பிள்ளைகளிடம் அப்பாவிற்கு காலில் அடிபட்டு உள்ளது. அவரால் தற்போது நடக்க முடியாது. நாம் சென்று நேரில் பார்த்தால் நமக்கு இன்பெக்சன் ஆகிவிடும் என்று தனது குழந்தைகளிடம் தான் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும் 12 நாட்களுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறியதும் சில நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு எனது கணவரை அழைத்து வந்தோம். வீட்டிற்கு வந்த பிறகு ஒரு முறை நடக்க முயன்றபோது அவர் தடுமாறி கீழே விழுந்தார். அப்படி கீழே விழுந்ததால் அவரின் முதுகு எலும்பில் பாதிப்பு ஏற்பட்டு மீண்டும் உடல்நிலை மோசமாகியது. முதுகு எலும்பில் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். 

இப்படி உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த எனது கணவர் 7 மாதங்களுக்குப் பிறகு மிகப்பெரிய போராட்டங்களை சந்தித்து ஒருவழியாக படுக்கையில் இருந்து தற்போது தான் வீல் சேரில் அமரும் அளவிற்கு முன்னேறி உள்ளார். இந்த ஏழு மாதங்கள் நான் பட்ட கஷ்டங்களையும் எனக்கு நேர்ந்த துயரங்களையும் என் எதிரிக்குக் கூட நேரக் கூடாது எனவும் நடிகை வினோதினி மனத்துயரத்துடன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.