உடலின் அந்த இடத்தில் கயிறு கட்டுனாங்க..! வலியில் துடிச்சேன்..! குணச்சித்திர நடிகை வினோதினிக்கு ஏற்பட்ட விபரீத அனுபவங்கள்!

ராட்சசன் திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்த வினோதினி திரை உலகில் தான் சந்தித்த அனுபவங்களை பற்றி மனம் திறந்துள்ளார்.


நடிகை வினோதினி எங்கேயும் எப்போதும், ராட்சசன், அரண்மனை, நண்பேண்டா, கோமாளி போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்துவருகிறார். அப்படியாக நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களை பேட்டி ஒன்றில் பேசும்போது பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

சிறிய வயது முதலே தனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் தன்னை சினிமா துறையில் ஈடுபடுத்திக் கொண்டதாகவும் புதிய கேரக்டரில் நடித்து பிரபலம் ஆக வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்றும் அவர் கூறியிருக்கிறார். இதற்காக பல கஷ்டங்களையும் தான் தங்கியிருப்பதாக அவர் கூறி மனம் நெகிழ்ந்து இருக்கிறார். 

அதாவது தான் ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில் நடித்த பொழுது பேருந்து கவிழ்ந்தது போல காட்சி படமாக்க வேண்டும் என்பதற்காக அவருடைய முதுகு தண்டுவடத்தில் கயிறு கட்டினார்களாம். இதனால் மிகுந்த வலி ஏற்பட்டு நடிகை வினோதினி அவதிப் பட்டிருக்கிறார். இந்த வலியை பொறுத்துக் கொண்டு அந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக அவர் நடித்துக் கொடுத்ததாக கூறியிருக்கிறார். 

நடிகர்கள் என்றாலே பொதுவாக அவர்கள் ஏசி அறையில் தான் இருப்பார்கள் என்று நாம் அனைவரும் எண்ணுவது உண்டு . அதற்கு மாறாக ஒவ்வொருவரும் தங்களுடைய பணியை சிறப்பாக செய்வதற்காக பல கஷ்டங்களையும் வலிகளையும் தாண்டிதான் சினிமாவிலும் பிரபல நட்சத்திரங்களாக ஜொலித்து வருகிறார்கள் என்று நடிகை வினோதினி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.