வித்யா பாலனுக்கு 40 வயசுக்கு மேல தான் புதுப் புது செக்ஸ் ஆசை வருதாம்!

40 வயசுக்கு மேல தான் தனக்கு செக்ஸ் ஆசை அதிகமாவதாக நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.


அஜித் 59 படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருப்பவர் வித்யா பாலன். இவர் சென்னையை பூர்வீகமாக கொண்டவர். ஆனால் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். நடிகை சில்க் வாழ்வை மையமாக வைத்து ஒரு படம் வெளியானது.

 

  டர்ட்டி பிக்சர் என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் சில்க் ஸ்மித்தாவாகவே வாழ்ந்திருப்பார் வித்யா பாலன். அந்த படத்தில் நடித்ததற்கு வித்யாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

 

  இவர் தனது 40வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்த நிலையில் அஜித்துடனும் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார். சென்னை பூர்வீமாக இருந்தாலும் தற்போது தான் நேரடி தமிழ் படத்தில் வித்யா நடிக்கிறார்.

 

   இந்த நிலையில் 40வது பிறந்த நாள் கொண்டாடியுள்ள வித்யா பாலன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 40 வயதை கடந்த காரணத்தினால் வயதானதாக உணர்கிறிர்களா என்று செய்தியாளரகள் கேட்டனர்.

 

   அதற்கு தற்போது தான் நான் மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக கருதுகிறேன். மேலும் இப்போது தான் நான் மிகவும் சேட்டைகள் செய்ய ஆரம்பித்துள்ளேன். சொல்லப்போனால் செக்சில் புதிது புதிதாக இப்போது தான் ஆசைகள் வர ஆரம்பித்துள்ளன.

 

  20 வயது இருக்கும் போது எனது வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். 30 வயதில் அந்த கனவை நிறைவேற்ற பாடுபட்டுக் கொண்டிருந்தேன். தற்போது கனவை நிறைவேற்றி மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

 

  40 வயதை கடந்த நிலையில் மிகவும் இளமையாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும் நான் என்னை உணர்கிறேன். இப்படி ஒரு பதிலை கூறி செய்தியாளர்கள் வாயை அடைத்தார் வித்யா பாலன்.