லாக்டவுனில் 30 கிலோ உடல் எடையை குறைச்சுட்டேன்..! காமெடி நடிகையின் அசர வைக்கும் டிரான்ஸ்பர்மேசன்! எப்படி தெரியுமா?

பிரபல காமெடி நடிகை வித்யூலேகா லாக்டவுன் நாட்களில் 30 கிலோ எடையை குறைத்து செம ஃபிட்டாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


தமிழ் சினிமாவில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தின் வாயிலாக நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா. பின்னர் நடிகர் சூர்யாவின் மாஸ், அஜித்தின் வேதாளம் , வீரம் போன்ற திரைப்படங்களில் காமெடி நடிகையாக களமிறங்கி என்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்களையும் தன்வசப்படுத்தி இருக்கிறார் நடிகை வித்யூலேகா.

நடிகை வித்யுலேகா பார்ப்பதற்கு மிகவும் பப்ளியாக கொழுகொழுவென இருப்பார். ஆனால் தற்போது நிலவி வரும் சூழலில் தன் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய முப்பது கிலோ எடையை அசாதாரணமாக குறைத்து காண்பித்திருக்கிறார். தற்போது தன்னுடைய உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம்மாகவும் ஃபிட்டாகவும் காட்சியளிக்கிறார் நடிகை வித்யூலேகா.

அவரது ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை வித்யுலேகாவா இது? என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இந்த நடிகையின் அசரவைக்கும் டிரன்ஸ்பாமேஷனை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை கமெண்ட்டுகளாக பதிவு செய்து வருகின்றனர்.