என் உயரத்துக்கும், உடல் அமைப்புக்கும் அந்த மாதிரி கேரக்டர் தான் சரியா இருக்கும்..! ரீ-என்ட்ரி விசித்ரா!

சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்பு, சினிமா துறையில் , சின்னத்திரை வழியாக அதிரடியாக ரீ-என்ட்ரி அளித்துள்ளார் நடிகை விசித்ரா.


சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராசாத்தி என்ற புதிய சீரியலில் வில்லியாக ரீ-என்ட்ரி அளித்துள்ளார் நடிகை விசித்ரா. இந்த ராசாத்தி செய்திகளில் நடிகர் விஜயகுமார் , செந்தில் போன்ற முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நிறைந்துள்ள இந்த சீரியலில் 18 ஆண்டுகளுக்கு பின்பு நடிகை விசித்ரா வில்லி ரோலில் நடித்து வருகிறார். 

பல ஆண்டுகளுக்குப் பின்பு சின்னத்திரை வழியாக சினிமா துறையில் கால் படித்ததை குறித்து நடிகை விசித்ரா பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அப்போது பேசிய அவர் பல ஆண்டுகள் கழித்து இப்போது இந்த சீரியலில் நடிப்பது எனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது .

இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு பல இயக்குனர்கள் இடமும் எனது நண்பர்களிடமும் நான் யோசனை கேட்டேன் . அதில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் , இயக்குனர் சேரன், சமுத்திரக்கனி போன்றோரும், "எனக்கு இது உங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு இதனை பயன்படுத்திக் கொண்டு மீண்டும் நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் " என்று அறிவுரை கூறியதாக நடிகை விசித்ரா கூறினார். 

மேலும் பேசிய அவர் இந்த சீரியலில் நடிகர் விஜயகுமார் செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர் . காமெடி நடிகர் செந்திலுடன் இணைந்து நான் முத்து திரைப்படத்தில் நடித்திருந்தேன். எங்களுடைய நடிப்பு முத்து திரைப்படத்தில் மிகப்பெரிய வரவேற்பு மக்களிடத்தில் பெற்றது. அதேபோன்று இப்போது இந்த சீரியலின் மூலமாக நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கிறோம்.

இது ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதே மாதிரி நாங்கள் எதிர்பார்த்தபடி எங்களுடைய நடிப்பு மக்களுக்கு பிடித்திருக்கிறது என்று நாங்கள் புரிந்து கொண்டோம் . தன்னை நீண்ட நாட்களுக்கு பின்பு சீரியலில் பார்ப்பதற்கு என்னுடைய குடும்பம் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளது என்று கூறி இருந்தார் நடிகை விசித்ரா 

என்னுடைய உயரம், உடல் அமைப்புக்கு வில்லி கேரக்டர் தான் சரியாக இருக்கும் என்று கூறினார்கள். அதனால் தான் சிரியலில் வில்லியாக அவதாரம் எடுத்துள்ளேன்.