என்னை சீரழித்தவன்..! பல பெண்களை அழ வைத்தவன்..! சீமான் குறித்து சீனியர் நடிகை வெளியிட்ட பகீர் வீடியோ!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை விஜயலட்சுமி, பல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்தவன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கிறார்.


கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார் நடிகை விஜயலட்சுமி. முதல் வீடியோவை வெளியிட்ட சில நாட்களிலேயே அவரிடம் உதவி கேட்கும் விதமாக மற்றொரு வீடியோ பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மீண்டும் நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ பதிவை வெளியிட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு நடைபெற்றது .இந்த விழாவில் சீமான் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். சீமான் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றதை விமர்சனம் செய்து நடிகை விஜயலட்சுமி புதிய பதிவை வெளியிட்டிருக்கிறார்.

அதாவது சீமான் பேசும்போது தான் பெரியார் வழியில் கட்சி தொடங்கியதாகவும் ஆகையால் சிவபெருமானை விமர்சனம் செய்து பேசினார். பின்னர் அவரே முருகன் தன்னுடைய முப்பாட்டன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படி மாறி மாறி கூற்றுகளை மாற்றி பேசிய சீமானை விமர்சித்து நடிகை விஜயலட்சுமி பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

கடவுளையே விமர்சனம் செய்த சீமான் தஞ்சை பெரிய கோவிலில் காலடி எடுத்து வைக்க தகுதியற்றவர் எனவும் அவர் பல பெண்களின் வாழ்க்கையை அழித்து சின்னாபின்னமாக்கியவர் என்றும் விஜயலட்சுமி அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். அவரால் பல பெண்களின் வாழ்க்கை அழிந்து கண்ணீர் மல்க நிற்கின்றனர் எனவும் விஜயலட்சுமி கூறியிருக்கிறார்.

இம்மாதிரியான பிரசித்தி பெற்ற கோவில்களை பாதுகாக்க ரஜினி மற்றும் எஸ்.வி.சேகர் போன்ற தலைவர்கள் உள்ளனர் என்றும் அவர்கள் இந்த பணியை வெகு சிறப்பாக செய்வார்கள் எனவும் அவர் கூறியிருக்கிறார். தற்போது விஜயலட்சுமி வெளியிட்டுள்ள இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.