காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய இளம் நடிகை! அதிர்ச்சியில் விஷம் குடித்த தாய்! வளர்ப்பு தந்தை மீது பகீர் புகார்! திரையுலக பரபரப்பு!

கன்னட திரை உலகில் துணை நடிகையாக வலம் வரும் விஜயலட்சுமி தன் காதலருடன் வீட்டை விட்டு வெளியேறியதால் அவரது தாய் அதிர்ச்சியில் விஷம் குடித்து உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.


கன்னட சினிமாவில் துணை நடிகையாக வலம் வருபவர் நடிகை விஜயலட்சுமி . இவர் கன்னட திரைப்படங்களில் இதுவரை 15 திரைப்படங்களுக்கும் மேல் துணை நடிகையாக நடித்து வந்துள்ளார். இயக்குனர் ஆஞ்சனய்யா தற்போது துங்கபத்திரா என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை விஜயலட்சுமி நடித்து வருகிறார் . இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது விஜயலட்சுமிக்கும் இயக்குனர் ஆஞ்சனய்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியுள்ளது.

விஜயலட்சுமி தன்னுடைய காதலைப் பற்றி தனது வீட்டில் கூறும் பொழுது அதற்கு மிகுந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர்களது காதலை விஜயலட்சுமி வீட்டில் ஏற்றுக் கொள்ளாததால் விஜயலட்சுமியும் அவரது காதலரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர் இதனால் விஜயலட்சுமி தனது வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். 

இந்த செய்தியை கேட்ட விஜயலட்சுமி தாயார் சவீதா மற்றும் அவரது பாட்டி சென்னம்மா ஆகியோர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளனர் . இந்த தற்கொலை முயற்சியில் வயது முதிர்ந்த அந்த சென்னம்மாள் பாட்டி பரிதாபமாக உயிர் இழந்தார் .மேலும் விஜயலட்சுமியின் தாயார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி ஆஞ்சனய்யா உடன் இணைந்து ராய்ச்சூர் இடத்தில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்திருக்கிறார். அங்கு அவர் தானும் தன்னுடைய காதலரும் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர்கள் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வதாகவும் கூறினார் .

மேலும் அவர்களது உயிரை காப்பாற்றுவதற்காக உரிய பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும் எனவும் அந்த புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார். நடிகை விஜயலட்சுமி அளித்த இந்த புகாரை இன்ஸ்பெக்டர் வேதமூர்த்தி பெற்றுக்கொண்டார். பின்னர் இருவரும் இணைந்து சிராவாரதாஹள்ளி கிராமத்தில் உள்ள ஆஞ்சனய்யாவின் இல்லத்திற்கு சென்றனர்.

இயக்குனர் ஆஞ்சனய்யாவின் வீட்டிற்கு சென்றபோது அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகை விஜயலட்சுமி தன்னுடைய தாயை பற்றியும் அவருடைய வளர்ப்புத் தந்தையை பற்றியும் பல திடுக்கிடும் தகவல்களை கூறினார். அப்போது பேசிய நடிகை விஜயலட்சுமி என்னுடைய பாட்டி இறந்திருக்க மாட்டார் என்றும் என் தாயும் அவரது இரண்டாவது கணவரும் இணைந்து நாடகமாடுகிறார்கள் எனவும் கூறினார்.

ஏற்கனவே எனது தாயார் என்னுடைய காதல் விஷயம் அறிந்து விஷமருந்தியது போல் நாடகமாடினார். அதே போல் தற்போதும் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன் எனவும் அவர் கூறினார் . மேலும் பேசிய அவர் எனது தந்தையும் தாயாரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் இதற்குப் பின்பு எனது தாயார் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். என்னுடைய தாயாரும் அவருடைய இரண்டாவது கணவரும் இணைந்து எனக்கு உடல் அளவிலும் மன அளவிலும் மிகப்பெரிய கஷ்டங்களை அளித்திருக்கின்றனர். 

அதுமட்டுமில்லாமல் என்னுடைய தாய்க்கும் அவரது இரண்டாவது கணவருக்கும் அதிகமான பணம் ஆசை உள்ளது. அவர்களுக்கு தேவையான பணத்தை எண்ணை வைத்து சம்பாதிக்கலாம் என்று நினைத்தார்கள் . ஆனால் அதற்கு நான் சம்மதிக்கவில்லை என்று என்னையும் எனது கணவரையும் தற்போது கொலை செய்யவும் துணிந்து இருக்கின்றனர் என்று அவர் கூறியிருக்கிறார். ஆகையால் தான் நான் காவல் நிலையத்திற்கு சென்று என் தாய் மீதும் அவருடைய இரண்டாவது கணவர் மீதும் புகார் அளித்து வந்துள்ளேன் என்று கூறியிருக்கிறார் நடிகை விஜயலட்சுமி.