நடிகர் சிம்புவுக்கு தான் முத்தம் கொடுக்க விரும்புவதாகவும் அதே சமயம் விஷாலை கொலை செய்ய வேண்டும் என்றும் நடிகை வரலட்சுமி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன்! ஏமாற்றிய விஷாலை டென்சன் ஆக்கும் வரலட்சுமி!
அண்மையில் பிகைன்ட் வுட்ஸ் ஆன்லைன் இணையதளம் சார்பில் விருது
வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை வரலட்சுமி பங்கேற்றார். சண்டக்கோழி
2 மற்றும் சர்கார் படத்தில் வில்லியாக நடித்த வரலட்சுமிக்கு விருது வழங்கப்பட்டது.
விருதை பெற்றுக் கொண்ட நடிகை வரலட்சுமியை தொகுப்பாளர் ஒரு கேள்வி கேட்டார். அதாவது
கில், கிஸ், மேரி என்கிற மூன்று வார்த்தைகளை கூறினார்.
அத்துடன் சிம்பு,
விஷால் மற்றும் எனிஒன் என்கிற மூன்று ஆப்சன்களையும் கொடுத்தார். முதலில் கூறிய மூன்று
வார்த்தைகளோடு பிறகு கூறிய பெயர்களை இணைத்து கூறுமாறு தொகுப்பாளர் கேட்க, வரலட்சுமி
சிறிதும் யோசிக்காமல் கிஸ் என்றால் அதற்கு சிம்பு தான் என்று கூற அரங்கமே அதிர்ந்தது.
அப்படி என்றால் மேரி என்றால் யார் என தொகுப்பாளர் கேட்க எனிஒன் என்று கூறி அதிர வைத்தார்.
சரி, அப்போது விஷாலுக்கு என்ன வார்த்தை என்று தொகுப்பாளர் கேட்டார்.
மீதி இருப்பது ஒரே
ஒரு வார்த்தை தான் விஷாலை கில் பண்ணனும் அதாவது கொலை செய்யனும் என்று கூறி அதிர வைத்தார்
வரலட்சுமி. விஷால் அண்மையில் தான் ஐதராபத்தை சேர்ந்த அனிஷாவுடன் தனது திருமணத்தை அறிவித்தார்.
ஆனால் முன்னதாக வரலட்சுமியை விஷால் காதலித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் அது இல்லை
என்று தற்போது ஆகியுள்ளது. இதனிடையே விஷால் தனது திருமணத்தை பற்றி அறிவிப்பதற்கு முன்னரே
இந்த விருது நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்படி என்றால் விஷால்
அனிஷாவை திருமணம் செய்து கொள்ள உள்ள தகவல் வரலட்சுமிக்கு அப்போதே தெரிந்துள்ளது. அதனை
மனதில் வைத்துக் கொண்டு தான் விஷாலுக்கு கில் என்கிற வார்த்தையை வரலட்சுமி தேர்வு செய்துள்ளார்.
மேலும் விஷாலை டென்சன் ஆக்க வேண்டும் என்பதற்கு தான் அவரது போட்டியாளரான சிம்புவுக்கு
முத்தம் கொடுக்க வேண்டும் என்று வரலட்சுமி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
எது எப்படியோ வரலட்சுமி
தான் கூறியது போல் விஷாலை கொலை செய்துவிடக்கூடாது, மேலும் விஷாலை பழிவாங்குவதாக நினைத்துக்
கொண்டு சிம்புவிடம் சென்று சிக்கிவிடம் கூடாது என்று திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள். என்னதான் பழைய காதலியாக இருந்தாலும் பரம எதிரியோடு கொஞ்சி குலாவுவதை எப்படி விஷாலால் தாங்கிக் கொள்ள முடியும் என்றும் கேட்கிறார்கள்.