அவன் என்னை ரொம்ப காயப்படுத்துகிறான்..! அண்ணன் அருண் விஜய் குறித்து தங்கை வனிதா வெளியிட்ட உணர்வுப்பூர்வ தகவல்!

தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வனிதா விஜயகுமார்.


இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார் வனிதா விஜயகுமார்.

இவருக்கும் இவரது தந்தை மற்றும் சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மோதல்களால் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது நடிகை வனிதாவும் அவரது இரண்டு மகள்களும் ஒன்றாக இருந்து வருகின்றனர்.

தனக்கு அனைத்து சொந்தங்களும் இருந்தும் தான் தனியாக வாழ்வதாக நடிகை வனிதா மிகவும் கண்ணீர் மல்க பல இடங்களில் கூறியிருக்கிறார். சமீபத்தில் தன் சகோதரரான அருண் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகை வனிதா விஜயகுமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தன் சகோதரியின் வாழ்த்துக்களுக்கு எந்த ஒரு பதிலும் நடிகர் அருண்விஜய் அளிக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது என்று தான் கூற வேண்டும். அதேபோல் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக நடிகை வனிதா தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு இ-மெயில் அனுப்பியிருக்கிறார் . இதுவரை அவர்களிடம் இருந்து ஒரு பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் தன் வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

தற்போது நடிகை வனிதா விஜயகுமார் மீண்டும் ஒரு புதிய பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதுபோல் தொடர்ந்து தன்னை , தன் வீட்டு சொந்தங்கள் தனிமைப்படுத்தி வருவதால் தான் மிகுந்த மன வேதனையில் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இருப்பினும் தானும் இந்தப் பிரிவின் மூலம் மேலும் நம்பிக்கை அடைந்ததாகவும் தனிமையில் தன்னையும் தன் குழந்தைகளையும் நல்ல முறையில் பார்த்துக் கொள்வதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் தன்னை தொடர்ந்து இவ்வாறாக மனவருத்தம் அடைய செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நடிகை வனிதா தன்னுடைய குடும்பத்தாரிடம் பணிவுடன் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

வனிதா வெளியிட்டுள்ள இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் நடிகை வனிதாவிற்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு வண்ணம் உள்ளனர்.