எனக்குள்ள இருக்கும் பெண்மை! உணர்வுகள்..! இதுக்கு தான் என்னை பீட்டர் கல்யாணம் செஞ்சிக்க ஒத்துக்கிட்டார்! வனிதா உடைத்த உண்மை!

வருகிற சனிக்கிழமை பிக்பாஸ் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில் அவரது திருமணம் பற்றியும் அவர் திருமணம் செய்து கொள்ள உள்ள பீட்டர் பால் பற்றியும் நடிகை வனிதா மனம் திறந்துள்ளார்.


சமீபத்தில் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை வருகிற 27-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் உலா வந்தது. இந்நிலையில் நடிகை வனிதா சில தினங்களுக்கு முன்பு இணையத்தின் வழியாக தனது திருமணம் பற்றி வெளியான தகவல் உண்மை என கூறியிருந்தார். இந்நிலையில் வருகிற சனிக்கிழமை இந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற உள்ளதால் திருமண வேலைகளில் நடிகை வனிதா பிஸியாக இருக்கிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நடிகை வனிதா கூறியதாவது: யாரையும் மறுமணம் செய்யக் கூடாது என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் பீட்டர் பால் என் முடிவை மாற்றிவிட்டார். அவர் ரொம்ப சாப்ட் கேரக்டர். என்னையும் என் மகள்களையும் அவர் நன்றாக பார்த்துக் கொள்கிறார். நான் தொடங்கி இருக்கும் யூடியூப் சேனலுக்கு அவர் நிறைய உதவிகளை செய்துள்ளார். முதலில் பீட்டர் தான் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று என்னிடம் கேட்டார். எனது குழந்தைகளுக்கும் அவரை மிகவும் பிடித்து இருந்தது. அதனால் நானும் ஓகே சொல்லிவிட்டேன்.

எங்களது திருமணம் என் வீட்டிலேயே மிகவும் எளிமையாக எங்களது நண்பர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. தற்போது நான் தலைவரின் இளமை திரும்புதே பாடலை அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன். வெளியிலிருந்து பார்ப்பதற்கு மிகவும் தைரியமான பெண்ணாக நான் தெரிவேன். ஆனால் எனக்கு மிகவும் இளகிய மனசு. எனக்குள்ளே இருக்கும் பெண்மையை உணர்வுகளை புரிந்துகொண்டு பீட்டர் வந்திருக்கிறார். என்னுடைய புகழுக்கும் சொத்துக்கும் அவர் ஆசைப்படாமல் இருக்கிறார். 

வேலையில் இருக்கும்போது கூட நான் பீட்டரை கோபத்தில் திட்டி இருக்கிறேன். எனினும் அவர் என்னை நன்றாகப் புரிந்துகொண்டு அமைதியாக இருந்து விட்டுக்கொடுத்து செல்வார். இதுபோன்ற லைஃப் பார்ட்னர் எனக்கு அமைந்தது இல்லை. இதுபோன்ற விஷயங்கள்தான் எனக்கு அவரை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பீட்டர் என்னை சமாதானப் படுத்துகிற விதத்தைப் பார்த்து என் குழந்தைகள் கூட சிரிப்பார்கள். என்னுடைய பெயரை அவர் கையில் டாட்டூவாக போட்டிருக்கிறார். அதை பார்த்தவுடன் என்னுடைய கண்கள் கலங்கிவிட்டது. இதனால் நானும் அவரது பெயரை கையில் டாட்டூவாக போட்டிருக்கிறேன்.

நான் கலந்துகொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து பீட்டர் பால் உன்னை எப்படி எல்லாரும் தப்பா பேசறாங்க என்று ஆச்சரியப்படுவார்.வனிதா விஜயகுமார் என்ற பெயரை வனிதா பீட்டர் என்று மாற்றும் அளவிற்கு நான் காதலித்து காட்டுகிறேன் என்று அவர் கூறியிருக்கிறார் எனவும் நடிகை வனிதா மனம் திறந்தார்.