நடிகை வாணிஶ்ரீயின் மகன் தூக்கில் தொங்கியது ஏன்? சடலத்தை இறக்கி தந்தை செய்த செயல்! போலீஸ் விசாரணையில் பரபர தகவல்!

பிரபல பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் மரணம் பற்றிய பரபரப்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.


நடிகை வாணிஸ்ரீ யின் மகன் பெயர் அபினய் வெங்கடேஷ் கார்த்திக். 36 வயதாகும் இவர் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவியும் மருத்துவர் ஆவார். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் ஒரு மகனும், பிறந்து எட்டு மாதங்களே ஆன ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நடிகை வாணிஸ்ரீ என் மகன் அபினய் வெங்கடேஷ் கார்த்திக் தனது 36 வயதில் திடீரென மரணமடைந்தார். அவரது தந்தை கருணாகரன் தனது மகன் மாரடைப்பில் இறந்து விட்டார் என்று கூறியிருந்தார். ஆனால் சிலர் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறிவந்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதாக புகைப்படங்களும் வெளியாகின.

திருக்கழுக்குன்றம் அருகே உள்ள ஆனூர் என்ற பகுதியில் நடிகை வாணிஸ்ரீயின் பாரம்பரிய வீடு ஒன்று உள்ளது. நடிகை வாணிஸ்ரீ சினிமாவில் நடிக்கத் தொடங்கியதும் இங்கிருந்து சென்னைக்கு வந்து விட்டார். கடந்த பல வருடமாக யாரும் தங்காமல் பூட்டி வைத்திருந்த இந்த வீட்டில் இரண்டு வருடங்களுக்கு முன்பிலிருந்து தான் நடிகை வாணிஸ்ரீயின் கணவர் கருணாகரன் தங்கி வந்துள்ளார். வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் அவரே பார்த்துக் கொள்வார். நடிகை வாணிஸ்ரீ யும் அவரது மகளும் எப்போதாவது இந்த வீட்டிற்கு வந்து செல்வார்கள் என்று கூறப்படுகிறது. 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது ஸ்பெஷல் பாஸ் மூலம் நடிகை வாணிஸ்ரீயின் மகன் கடந்த ஆறாம் தேதி ஆனூர் ஒரு கிராமத்திற்கு வந்துள்ளார். சென்னையிலுள்ள வீட்டில் இவரது மனைவி குழந்தைகள் தங்கி இருக்கிறார்கள். அங்கே சென்றால் தன்னால் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற காரணத்தினால் அவர் ஆனார் கிராமத்திற்கு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் தனது சொந்த கிராமத்திற்கு சென்ற பிறகு அங்கேயே தங்கி இருக்கும் தனது தந்தை கருணாகரன் மற்றும் வீட்டில் வளர்த்து வரும் நாயுடன் வாக்கிங் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி இரவு 12 மணி வரை வாணிஸ்ரீயின் மகன் அபினய் மது அருந்திவிட்டு படுக்க சென்றிருக்கிறார் என்றும் பின்னர் வீட்டுக்குள் தாம் அணிந்திருந்த வேட்டியின் மூலமாகவே தூக்கு போட்டு கொண்டார் என்றும் கூறப்படுகிறது. அதிகாலையில் தனது மகன் தூக்கில் தொடங்கியுள்ளதை கண்ட அவரது தந்தை கருணாகரன், உடல் சூடாக இருக்கவே தரையில் இறங்கி இருக்கிறார். தனது மகன் இறந்து விட்டதை உறுதிப்படுத்திய கருனாகரன் பின்னர் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். மன அழுத்தம் காரணமாக தனது மகன் பல முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார் எனவும் கருணாகரன் போலீசாருக்கு தெரிவித்துள்ளதாகவும், கத்தியால் கைகளில் கீறிக்கொண்டு பலமுறை தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் நடந்துள்ளன எனவும் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு கடந்த 15 வருடமாக மன அழுத்தம் அதிகமாக இறந்துள்ளதாகவும் அதற்காக அவர் சிகிச்சையும் எடுத்துக் கொண்டுள்ளார் எனவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.