இரவெல்லாம் அடி உதை! விடிந்தால் சித்ரவதை! விவாகரத்து கோரும் டிவி நடிகை!

மும்பையை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை வாபிஸ் தொராப்ஜி தன்னை போல் உள்ள தொலைக்காட்சி நடிகரான விவினியனுடன் கடந்த 2013 -ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.


இனிதே   சென்ற இவர்களுது திருமண வழக்கை கசக்க தொடங்கியது. இருவருக்கும்  இடையில் ஏற்பட்ட கருத்து  வேறுபாடு காரணமாக கடந்த 2016-ஆம்  ஆண்டு விவாகரத்து கோரி பூனே நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். இதன் பின்பு இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்கின்றனர்.  இந்த விவாகரத்து வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இதனை பற்றி வாபிஸ் இடம் பேசிய போது அவரை, இரவெல்லாம் அவரது கணவர் விவினியன் அடித்து துன்புறுத்துவதாகவும், விடிந்தால் கொடுமைப்படுத்துவதாகவும் கூறினார்.இவர்களுது பிரிவிற்கு ஏதோ ஒரு மூணாவது நபர் தான் காரணம் என்று பல தரப்பினர் கூறினர்.  ஆனால் விவினியன் வாபிசை கொடுமைப்படுத்தியதே இந்த விவகாரத்திற்கு காரணம் என்று இப்போது தெரிய வந்துள்ளது .

மேலும் வாபிஸ் தனது கணவரிடம் ரூ.2 கோடி வேண்டும் என்று கூறியுள்ளதால் தான் இந்த வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று கூறப்படுகிறது. இதனை பற்றி கேள்விப்பட்ட வாபிஸ் மிகுந்த கோபம் அடைந்து சமூக வலைதளத்தில் அவர் யாரிடமும் பணம் கேட்கவில்லை என்றும் , சரியான காரணம் தெரியாமல் யாரும் இதை பற்றி பேச வேண்டாம் என்றும் பதிவிட்டுள்ளார்.

பின்பு அவர் இந்த உலகில் நான் மட்டும் தான் விவாகரத்து செய்கிறேனா? வேறு எவரும் செய்வது இல்லையா? என்று கோபத்துடன் கேள்வி எழுப்பி உள்ளர்.