காதும் கேட்காது..! வாய் பேசவும் முடியாது..! ரசிகையை சந்தித்து நெகிழ வைத்த பிரபல நடிகை!

ஹிந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையான ஊர்வசி ரவுடலா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


நடிகை ஊர்வசி ரடவுலா, இந்தி மற்றும் கன்னட சினிமா துறையில் மிகவும் பிரபலமான நடிகை ஆவார் இவர் பாலிவுட் திரையுலகில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர். தற்போது இவர் ஒரு வீடியோ பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் நடிகை ஊர்வசி , காது கேளாமல் மற்றும் வாயும் பேச முடியாமல் இருக்கும் தன்னுடைய ரசிகை ஒருவருடன் மிகவும் அழகான உரையாடலை மேற்கொள்கிறார் . அந்த பதிவை தான் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் . அதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஊர்வசியை மிகவும் பாராட்டி வருகின்றனர். 

மேலும் இந்த பதிவிற்கு கேப்சனாக," ஆல்கா காது கேட்க முடியாமல் மற்றும் வாய் பேச முடியாமல் இருக்கக் கூடியவர் . இவர் என்னுடைய மிகப்பெரிய ரசிகை ஆவார் . மேலும் இந்த மாதிரி உள்ள அனைத்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகளையும் நாம் ஆதரிக்க வேண்டும் . இந்த சமுதாயத்தில் அவர்களை புறக்கணிக்காமல் அவர்களை நம்முள் ஒருவராக நாம் ஏற்றுக்கொண்டு அவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் " எனவும் பதிவிட்டிருந்தார்.