3 படுக்கை அறைகளுடன் பிரமாண்ட புதிய வீடு! அந்த ஏரியாவில் குடியேறிய டாப்சீ!

தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை டாப்சீ தற்போது மும்பையில் 3 படுக்கை அறைகள் கொண்ட அப்பார்ட்மென்ட் ஒன்றை புதிதாக வாங்கி உள்ளார்.


தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை டாப்சீ. ஆனால் அவர் தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியாகி வரும் திரைப்படங்கள் எல்லாம் வெற்றி பெற்று வருகின்றன. அண்மையில் கூட அமிதாப் பச்சானுடன் இணைந்து டாப்சி நடித்த பத்லா மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள் படத்தில் டாப்சி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை டாப்சீ, மும்பையில் தற்போது அவர் வசித்து வரும் இடத்திற்கு அருகிலேயே 3 படுக்கை அறைகளை கொண்ட அப்பார்ட்மென்ட் ஒன்றை புதிதாக வாங்கி உள்ளார். இது பிரபல நடிகைகள், நடிகர்கள் வசிக்கும் மிக முக்கியமான பகுதியாகும்.

இதற்கான இன்டீரியர்  பணிகள் அனைத்தையும் டாப்ஸியின் சகோதரி ஷகன் மேற்கொள்ளப்போகிறார் என மிகவும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார் நடிகை டாப்சீ. அப்பார்ட்மென்ட் விற்பனைக்கு வரப்போகிறது என்று அறிந்த உடனே நடிகை டாப்சீ அதனை வாங்க முடிவு செய்துவிட்டார். இப்போது அதனை வெற்றிகரமாக வாங்கியும் விட்டார். கூடிய விரைவில் வீட்டிற்கான பனி தொடங்கும் என்று மகிழ்ச்சியுடன்  கூறியுள்ளார் நடிகை டாப்ஸி.

நடிகை டாப்சீ பல மொழிகளில் உருவாக்கப்படும் "கேம் ஓவர்" என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்க்கான ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு இவரே தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்ய உள்ளார்.  y நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டெர்டைன்மெண்ட் இணைந்து "கேம் ஓவர்"  திரைப்படத்தை  தயாரிக்க உள்ளது. 

அனுராக் இந்த படத்தை ஹிந்தியில் இயக்குகிறார். இப்படத்திற்கான  இசையை ரான் யோஹான் அமைக்கிறார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 14 -ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக் குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.