விபச்சார வழக்கில் கைதான நடிகைக்கு வாழ்க்கை கொடுத்த தயாரிப்பாளர்..! ஆனால் ஒரே வருடத்தில் நடிகை எடுத்த முடிவு!

மக்தி திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஸ்வேதா பாசு பிரசாத் தன்னுடைய காதல் கணவரை விட்டுப் பிரிய போவதாக தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.


நடிகை ஸ்வேதா , திரைப்பட தயாரிப்பாளரான ரோகித் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் மிக பிரம்மாண்டமாக பல பிரபலங்களும் கோலாகலமாக நடைபெற்றது.

நடிகை ஸ்வேதா சிறுவயது முதலே சினிமாவில் பல கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளமே அமைந்துள்ளது. தொடர்ச்சியாக இவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடிகை ஸ்வேதா விபசார வழக்கில் கைதாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பினார்.

இதனையடுத்து ரோகித் மிட்டால் என்பவரை நடிகை ஸ்வேதா காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 13ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திடீரென்று நடிகை ஸ்வேதா தனது கணவரிடமிருந்து பிரிய போவதாக சமூகவலைத்தள பக்கத்தில் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

இந்த பதிவில் நடிகை ஸ்வேதா, நானும் என்னுடைய கணவரும் மனப்பூர்வமாக பிரிவதற்கு முடிவு செய்துள்ளோம். பல மாத யோசனைகளுக்கு பின்பு இந்த முடிவை நாங்கள் இருவரும் எடுத்துள்ளோம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஆசைகள் இருக்கும் ஒரு புத்தகத்தை முழுமையாக படிக்கவில்லை என்றால் அது தவறான புத்தகம் என்று அர்த்தமாகாது. முடிக்க முடியாமல் இருக்கும் சில விஷயங்கள் தான் நம் வாழ்க்கையில் நன்மையை தரும். எனவே ரோகித் உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.