காதலனை பிரிய காரணம் தகாத உறவா? தனுஷ் ஹீரோயின் சொன்ன காரணம்..!

நடிகை ஸ்வரா பாஸ்கர் முதன்முறையாக தன் காதலருடன் ஏற்பட்ட பிரிவினை பற்றி மனம் திறந்து கூறியிருக்கிறார்.


ராஞ்சனா என்ற திரைப்படத்தில் தனுஷூடன் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்வாரா பாஸ்கர். கடந்த 2011 ஆம் ஆண்டு தனு வெட்ஸ் மனு படத்தின் படப்பிடிப்பின் போது ஹிமான்ஷுவுடன் டேட்டிங் செய்ததன் மூலமாக பழக ஆரம்பித்திருக்கிறார் நடிகை ஸ்வாரா பாஸ்கர். இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகை ஸ்வரா பாஸ்கர் மற்றும் பிரபல திரைப்பட எழுத்தாளர் ஹிமான்ஷு காதல் பிரேக் அப் செய்து கொண்டனர். இதுகுறித்து இருவருமே மனம் திறக்காத நிலையில் தற்போது நடிகை ஸ்வரா பாஸ்கர் முதல்முறையாக இதுகுறித்து கூறியிருக்கிறார். பிரேக்-அப்கள் யாருக்கும் கடினம்.. நீங்கள் அதை சமாளிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எங்கள் விஷயத்தில், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. 

மேலும் அவரிடம் உங்களுடைய காதல் உறவை பற்றி கூறுங்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை ஸ்வரா பாஸ்கர், நானும் இதைப் பற்றி தான் எப்பொழுதும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உறவுகளுடன் என்றாக செல்ல முடிவு செய்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதில் ஒருவர் இடது பக்கம் செல்லலாம் என்று கூறுகிறார். மற்றொருவர் வலது பக்கம் செல்லலாம் என்று கூறியிருக்கிறார்.

இருவரும் ஒன்றாக செல்ல வேண்டுமென்றால் இருவரில் ஒருவர் தங்களுடைய ஆசையை விட்டுவிட்டு மற்றவரின் ஆசைக்கு கட்டுப்பட வேண்டும். இருவரில் ஒருவரும் தங்களுடைய ஆசையை விட்டு கொடுக்க முடியவில்லை என்றால் அங்கு அந்த உறவு வலுவடையும். இருவரும் ஒன்றாக செல்ல வேண்டும் என்பதில் ஆசையாகத் இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்களுடைய தனிப்பட்ட பாதையை விட்டுத் தர முன்வரவில்லை என்றால் அங்கு பிரச்சனைகள் எழும்.

எங்களுடைய விஷயத்திலும் இதுதான் நடந்தது என நடிகை ஸ்வரா பாஸ்கர் மனம்திறந்து கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஸ்வரா பாஸ்கர் ஹிமான்ஷுவுடன் காதல் பிரேக் அப் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இவர்கள் இருவரின் பிரிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.