திருமணமாகி விவாகரத்தான அந்த நடிகர் மீது எனக்கு ஆசை..! திருமணமாகாத தமிழ் நடிகை ஓபன் டால்க்!

தமிழ் திரையுலகில் நடித்து பிரபலமான நடிகை சுனைனா, தனக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மீது க்ரஷ் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


தமிழ்சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. இதனைத் தொடர்ந்து நீர்ப்பறவை, மாசிலாமணி , வம்சம் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். சமீப காலமாகவே எந்த திரைப் படத்திலும் நடிக்காத இவர் தற்போது ரசிகர்களுடன் இணைந்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறினார். 

அப்படியாக பேசும்போது ரசிகர் ஒருவர் உங்களுடைய முதல் க்ரஷ் யார்? என்று கேள்வி எழுப்பினார். அதுக்கு பதில் அளிக்க நடிகை சுனனனா என்னுடைய முதல் க்ரஷ் எப்போதுமே பாலிவுட் நடிகரான ரித்திக் ரோஷன் தான் என்று பகிரங்கமாக கூறியுள்ளார். மேலும் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவையும் வெளியிட்டுள்ளார். 

இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் விவாகரத்தான நடிகரின் மீதா உங்களுக்கு க்ரஷ் இருக்கிறது ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபகாலமாகவே நடிகைகள் தங்களுடைய முதல் க்ரஷ் பற்றி கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் நடிகை சுனைனா தன்னுடைய முதல் க்ரஷ்ஷை பற்றி கூறிய தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.