தினமும் ஒரு சரக்கு பாட்டில்..! ஊரடங்கிலும் விதவிதமாக குடிக்கும் பிரபல நடிகை..! இவருக்கு மட்டும் எப்படி கிடைக்குது?

தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே கையில் சரக்கு பாட்டிலுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இருக்கிறார் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி, தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


நடிகை ஸ்ரீரெட்டி என்றாலே சர்ச்சைக்குப் பெயர் போனவர். இவரது பெயரைக் கேட்டாலே பிரபல இயக்குனர்களும் முன்னணி நடிகர்களும் அலற கூடிய அளவிற்கு மிகப்பெரிய சர்ச்சைகளை உண்டாக்கியவர். அதாவது இவர் சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டாலே அது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி ஹாட் டாபிக்காக வலம்வரும்.

இவர் வெளியிடும் புகைப்படத்தை விட அவர் எழுதும் பதிவுகள் தான் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி வருகின்றன. தனக்கு பிடிக்காதவர்கள் என்றால் ஸ்ரீரெட்டி அவர்களை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் மூலம் வசை பாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதிலும் அவர்களை கெட்ட வார்த்தையில் கொஞ்சம் கூட கூச்சபடாமல் திட்டும் செயலில் ஈடுபட்டு வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி. 

 

சமீபத்தில் கூட தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், என்னுடைய உடம்பு நான் என்ன வேணாலும் செய்வேன் என்று மிகவும் பச்சை பச்சையாக பதிவுகளை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். தற்போது புகைப்படங்களை பதிவிட்டு மீண்டும் புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். அந்த புகைப்படத்தில், கைகளில் சரக்கு பாட்டில்களை வைத்து கொண்டும் கால்களை நீட்டிக் கொண்டும் ஒய்யாரமாக டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி. அதுமட்டுமில்லாமல் அவருக்கு அருகில் பல சரக்கு பாட்டில்களும் அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருப்பதை அந்த புகைப்படத்தில் நம்மால் பார்க்க இயலும்.

இந்த புகைப்படத்தை வெளியிட்டு நடிகை ஸ்ரீரெட்டி தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். ஒருவன் அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் உங்களுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் கிடைக்கிறது என நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கேள்விகளை ஸ்ரீரெட்டி முன்வைத்துள்ளனர். மேலும் பலரும் தங்களுடைய கருத்துக்களை கமெண்ட்களாக அந்தப் புகைப்படத்திற்குக் கீழே பதிவு செய்து வருகின்றனர். தற்போது ஸ்ரீ ரெட்டி வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.