சீனியர் டைரக்டர் வேண்டாம்..! இளம் ஹீரோவை பிடித்த ஸ்ரீரெட்டி..! கோடம்பாக்கம் கிசுகிசு!

பிரபல சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டியின் பார்வை தற்போது இளம் ஹீரோவான விஜய் தேவரகொண்டா மீது திரும்பியுள்ளது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடிகை ஸ்ரீரெட்டி என்றாலே சர்ச்சைக்குப் பெயர் போனவர். இவரது பெயரைக் கேட்டாலே பிரபல இயக்குனர்களும் முன்னணி நடிகர்களும் அலற கூடிய அளவிற்கு மிகப்பெரிய சர்ச்சைகளை உண்டாக்கியவர். அதாவது இவர் சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டாலே அது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி ஹாட் டாபிக்காக வலம்வரும்.

அந்த வகையில் நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பாக இயக்குனர் ஒருவரை சுட்டிக்காட்டி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவானது பெரும் தாக்கத்தை சினிமாத்துறையில் ஏற்படுத்தியது. அந்தப் பதிவின் சர்ச்சை ஏற்பட்டு அடங்குவதற்கு முன்னதாகவே நடிகை ஸ்ரீரெட்டி தற்போது மீண்டும் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.

அறிமுகமான சில நாட்களிலேயே இளம் நடிகர் விஜய் தேவர் கொண்டா தன்னுடைய க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார். தற்போது நடிகை ஸ்ரீரெட்டி இளம் நடிகரான விஜய் தேவர்கொண்டாவையும் விட்டு வைக்கவில்லை. 

அதாவது விஜய் தேவர் கொண்டவை குறிப்பிட்டு நடிகை ஸ்ரீரெட்டி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் கமெண்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், விஜய் தேவரகொண்டா, உங்களை நாங்கள் அதிகம் விரும்புகிறோம். நீங்கள் பாலிவுட் ஸ்டாரான ரன்வீர் சிங்கை காப்பி அடிக்கத் தேவையில்லை. ஏனெனில் எங்களுக்கு ஜெராக்ஸ் வேண்டாம், அசல்தான் வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்