இளமை இருக்கு..! அழகு இருக்கு..! ஆனால் என்ன பிரயோஜனம்..! ஏக்கத்தில் பிரபல குணசித்திர நடிகை வெளியிட்ட தகவல்!

பிரபல குணச்சித்திர நடிகை ஸ்ரீரஞ்சனி தமிழ் சினிமாவில் தான் கடந்து வந்த பாதையை பற்றி மனம் திறந்துள்ளார்.


அந்நியன் ,மொழி ,திமிரு ,அலைபாயுதே, செல்லமே, என்றென்றும் புன்னகை ஆகிய திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீரஞ்சனி. இவர் பல படங்களில் அம்மா அண்ணி கேரக்டர்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் தான் கடந்து வந்த பாதையை பற்றி மனம் திறந்தார்.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில் நான். சிறு வயதிலிருந்தே ஆங்கிலத்திலேயே பேசி வளர்ந்து விட்டதால் தமிழ் எனக்கு அந்த அளவிற்கு பேச வராது.பின்னர் சென்னைக்கு வந்த பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் கற்றுக்கொண்டு பேச ஆரம்பித்தேன் எனவும் நடிகை ஸ்ரீரஞ்சனி கூறினார்.

நான் ஆரம்பத்தில் இயக்குனர் பாலச்சந்தரின் யூனிட்டில் தான் இருந்தேன். அப்போது ஒன்றும் தெரியாத மக்கு போல தான் இருந்தேன். பாலசந்தர் சார் நான் எனக்குள்ளிருந்த திறமையை கண்டறிந்து என்னை ஒரு சிறந்த நடிகையாக மாற்றினார்.  தொடர்ந்து பேசிய அவர் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறி நடிக்கணும். இந்த கேரக்டரில் என்னுடைய முழுத்திறமையையும் காட்டி நடிக்க வேண்டும்.

அது ஒரு சாதாரண கெஸ்ட் ரோலாக இருந்தாலும் கூட அதை ஏற்றுக் கொண்டு நம்முடைய திறமையான நடிப்பின் மூலம் நமது பெஸ்ட்டை கொடுக்க வேண்டுமெனவும் நடிகை ஸ்ரீரஞ்சனி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.நான் முதலில் அலைபாயுதே திரைப்படத்திலும் மாதவனுக்கு அண்ணி கேரக்டரில் நடித்தேன். அது தொடர்ந்து மூன்று படங்களைத் தொடர்ந்து அவருடன் நடித்ததால் என்னை நடிகர் மாதவனின் உண்மையான அண்ணி என்றே அனைவரும் நினைத்து விட்டனர்.

ஏனென்றால் எனக்கு தொடக்கத்தில் சரியாக தமிழ் பேச வராது என்ற காரணத்தினால் தான் என்னை அனைவரும் அவ்வாறு நினைத்தனர் என்றும் நடிகை ஸ்ரீரஞ்சனி கூறினார். சினிமாவை பொறுத்தவரை வசீகரமாக முகம் இருந்தாலும் கூட சில கேரக்டர்கள் தான் பொருத்தமாக இருக்கும். அதேபோல இளமையாக அழகாக இருந்தாலும் அவர்களுக்கு வயதான கேரக்டர்தான் கிடைக்கும் எனவும் நடிகை ஸ்ரீரஞ்சனி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.