ஸ்ரீதேவி எனும் அழகி! வடக்கே கனவுக்கன்னியாக திகழ்ந்த முதல் தெற்கத்தி பொன்னு!

நடிகை ஸ்ரீதேவி 1963-ஆம் ஆண்டு சிவகாசியில் உள்ள மீனம்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தார் .


நடிகை ஸ்ரீதேவி சிறு வயதிலேயே தன்னுடைய பெற்றோர்களை இழந்து விட்டார். இதன் காரணமாக வாழ்க்கையில் மிகவும் சவாலான விஷயங்களை சந்தித்து திரைப்பட வாழ்க்கையை தொடர்ந்தார். 

நடிகை ஸ்ரீதேவி கடந்த 1967ஆம் ஆண்டு முதன்முதலாக "கந்தன் கருணை" என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் 

பின்னர்  1976 ஆம் ஆண்டு இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் "மூன்று முடிச்சு" திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவி முதல் முதலில் கதாநாயகியாக அறிமுகமானார் . இதற்குப் பின் இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் நடிகை ஸ்ரீதேவி நடித்த 1"6 வயதினிலே " என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக திரைத்துறையில் திகழ்ந்தார்.

இது மட்டுமில்லாமல் ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த "மூன்றாம் பிறை " என்ற திரைப்படம் தமிழ் சினிமாவில் ஸ்ரீதேவிக்கு மிகப்பெரிய திருப்புமுனை என்றே கூற வேண்டும். ஏனெனில் இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. 

தமிழ் , மலையாளம், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய நடிப்புத் திறமையினால் அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பெற்றார் நடிகை ஸ்ரீதேவி.

நடிகை ஸ்ரீதேவி மலையாளத்தில் ஆலிங்கனம்’, ‘குட்டவும் சிக்க்ஷையும்’, ‘ஆத்யபாடம்’, ‘ஆ நிமிஷம்’ போன்ற திரைப்படங்களில் நடித்து கேரள ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார்.

கடந்த 1978ஆம் ஆண்டு "சொல்வார் சால்வன் " என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி திரைப்படத்தில் துறையில் நுழைந்தார் நடிகை ஸ்ரீதேவி.  ஆனால் இந்தப் படமானது நடிகை ஸ்ரீதேவிக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை இதற்குப் பின் இரண்டாவதாக இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் 

"ஹிம்மத்வாலா".

 இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை இவருக்கு அளித்தது இதற்குப் பிறகுதான் இதுவும் மிகப்பெரிய திருப்புமுனையாக ஸ்ரீதேவி என் வாழ்வில் அமைந்தது என்றே கூறலாம்.

ஏனெனில் இந்த படத்துக்கு பிறகுதான் ஸ்ரீதேவிக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து ஹிந்தி சினிமாவில் வழங்கப்பட்டது . இதற்குப் பின்பு மிகப்பெரிய சம்பளத்தில் வேலை பார்க்கும் ஒரு அந்தஸ்தை இவர் பெற்றார். 

தெற்கில்  இருந்து சென்ற ஒரு தமிழ் நடிகை  முதன்முதலாக வடக்கில் யாருமே எதிர்பாராத அளவில் மிகப்பெரிய சம்பளத்தில்  பணியாற்றிய பெருமையை நடிகை ஸ்ரீதேவி பெற்றார்.

நடிகை ஸ்ரீதேவி ஹிந்தி சினிமாவின் தயாரிப்பாளர்  போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்பும் போனிகபூரின் தம்பியான அணில் கபூர் உடன் இணைந்து  பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் . 

இதற்குப்பின் 14 ஆண்டுகள்  இடைவெளி எடுத்துக்கொண்டு ஸ்ரீதேவி "இங்கிலீஷ் விங்கிலீஷ் " என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார் . இந்த திரைப்படமானது தமிழ் , இந்தி, தெலுங்கு என மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குப் பின் தமிழில் புலி என்ற திரைப்படத்திலும் நடிகை ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ரீதேவி இதுவரை 300 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பை பாராட்டி இவருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய அரசால்  "பத்மஸ்ரீ " விருதும் வழங்கப்பட்டுள்ளது. 

நடிகை ஸ்ரீதேவி கடைசி "mom" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தமிழில் "அம்மா" என்று வெளியிடப்பட்டது.

கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி நடிகை ஸ்ரீதேவி எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி  உயிரிழந்தார். 

ஸ்ரீதேவி நம் மண்ணை விட்டு போனாலும் அவரது புகழ் என்றும் நீடித்துக் கொண்டுதான் இருக்கும் .