சென்னையில் பிரபல நடிகர் வீட்டில் ரகசியமாக நடைபெற்ற ஸ்ரீதேவி திருமணம்! சாட்சியாக நின்ற பிக்பாஸ் பிரபலம்!

ஸ்ரீதேவி இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் . தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிப்படங்களில் நடித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் நடிகை ஸ்ரீதேவி. தயாரிப்பாளர் போனி கபூரின் இரண்டாவது மனைவி ஸ்ரீதேவி ஆவார்.


போனி கபூர் நடிகை ஸ்ரீதேவியின் மீது காதல் வசப்பட்டார் இருவருக்கும் இடையில் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது. 

போனி கபூர் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் ஆக இருந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி , போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

போனி கபூரின் முதல் மனைவியான   மோனா கபூர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்து இருந்தார்.

அப்போது போனி கபூரும்  நடிகை ஸ்ரீதேவியும் எவரும்  அறியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.

நடிகர் ஸ்ரீதேவி திருமணம் சென்னையில் உள்ள நடிகர் விஜயகுமார் வீட்டில் நடைபெற்றது. ஸ்ரீதேவி - போனி கபூர் காதல் விவகாரம் வெளியாகி பெரிய சர்ச்சையானது. 

இதனால் மும்பையில் இருந்து ஸ்ரீதேவி சென்னை வந்துவிட்டார். அவரை தேடி போனி கபூர் சென்னை வந்தார். ஆனால் திருமணம் செய்தால் தான் மும்பை வருவேன் என்று ஸ்ரீதேவி அடம்பிடித்தார். அப்போது அவசர அவசரமாக ஸ்ரீதேவி - போனி கபூர் இருவருக்கும்  நண்பர் விஜயகுமார் தனது வீட்டிலேயே திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். அப்போது ஸ்ரீதேவி கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த திருமணம் நடைபெற்ற போது பிக்பாஸ் பிரபலம் வனிதா சிறுமியாக அந்த வீட்டில் இருந்தார். இந்த தகவலை சில வருடங்களுக்கு முன்னர் வெளியிட்டு அதிர வைத்தவர் வனிதா.