வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்லும் முன்னணி நடிகைகள்! ஸ்ரீரெட்டியின் அடுத்த அணுகுண்டு!

திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கொண்டு ஒரு படம் உருவாகிறது.


தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பலர் மீது பாலியல் புகார் தெரிவித்தவர் ஸ்ரீரெட்டி. வாய்ப்பு தருவதாகக் கூறியும், ஏமாற்றியும் தன்னை பலர் தவறாகப் பயன் படுத்திக் கொண்டதாக் அவர் புகார் தெரிவித்தார்.

 

ஸ்ரீரெட்டி சில படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ஒரு படத்தின் பெயர் ரெட்டி டைரி. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஸ்ரீரெட்டியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது

 

இந்தப் படத்தில் புதுமுகங்களுடன் ஸ்ரீரெட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சித்திரைச் செல்வனின் ரங்கீலா ஃபிலிம் ஹவுசும் ரவிதேவனும் சேர்ந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை டாக்டர் அலாவுதீன் இயக்க, சித்திரைச் செல்வன்  கதை, திரைக்கதை எழுதியுள்ளார்

 

திரையுலகில் பெண்கள் சந்திக்கும் இன்னல்களை விளக்கும் வகையிலான இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் ஆலப்புழை, கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிலையில் ஏப்ரலில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த படத்தில் வாய்ப்புக்காக பிரபல நடிகைகள் யார் யாரெல்லாம் படுக்கைக்கு செல்கிறார்கள் என்று வெளிப்படையாக ஸ்ரீரெட்டி மூலமாக கூறுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

 

அந்த நடிகைகளின் பெயரை வெளிப்படையாக கூறவில்லை என்றாலும் அவர்களுக்கு உரிய பட்டப் பெயரை பயன்படுத்தி நடிகைகளின் லீலைகளை கட்டவிழ்த்துவிட ஸ்ரீரெட்டியை பயன்படுத்தியுள்ளனர்.