சினேகாவுக்கு பிரசவ வலி..! மிகப்பெரிய ஊசி..! அந்த இரவு! மனைவியின் வேதனையை கூறி கலங்கிய பிரசன்னா!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த நடிகை சினேகா தன்னுடைய பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


புன்னகை அரசி என்று தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை சினேகா . எந்தவித ஏற்றத்தாழ்வும் பாராமல் தன்னுடன் பழகும் அனைவரிடமும் அன்பும் அரவணைப்பும் கொண்டு பழகுபவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு என்னவளே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் சினேகா பிரசன்னாவுடன் இணைந்து நடித்திருந்தார்.

அப்போது அவர்களுக்கு இடையில் காதல் மலர்ந்தது. இதனையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2012ஆம் ஆண்டு மே 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு விஹான் என்ற ஒரு ஆண் குழந்தையும் இந்த தம்பதியினருக்கு பிறந்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது நடிகை சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் வெளியான இந்த தகவலை அடுத்து சினேகாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். தற்போது தன்னுடைய பிரசவத்திற்காக நடிகை சினேகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் பிரசன்னா கூறியுள்ளார்.

முதல் பிரசவத்தின் போது தனக்கு பிரசவவலி ஏற்படாத காரணத்தால் அறுவைசிகிச்சையின் மூலமாகவே முதல் குழந்தை பிறந்ததாகவும், அதனால் சினேகா பட்ட கஷ்டத்தையும் வலியையும் தன்னால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை எனவும் நடிகர் பிரசன்னா மிகவும் உருக்கமாக கூறி இருந்தார்.

இதற்குப் பின்னர் பேசிய நடிகர் பிரசன்னா குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு அம்மாவும் தெய்வம் என்றும் குறிப்பிட்டிருந்தது அனைவரையும் நெகிழ செய்தது. நடிகை சினேகா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து அவரது ரசிகர்கள் விரைவில் அவருக்கு நல்லபடியாக குழந்தை பிறந்து வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்து செய்தி கூறிவருகின்றனர்.