முதல் முறையாக ஆடை இல்லாமல் ஆண்கள் முன் நின்றேன்! பிரபல இளம் நடிகை வெளியிட்ட சீக்ரெட்!

ராஜாவுக்கு செக் படத்தின் காட்சியின் முக்கியத்துவம் கருதி நிர்வாணமாக நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது என்று பிரபல நடிகை சிருஷ்டி கூறியுள்ளார்.


நடிகர் சேரன் மற்றும் நடிகை சிருஷ்டி நடிப்பில் கடந்த வாரம் ராஜாவுக்கு செக் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை சிருஷ்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண் கதாபாத்திரத்தில் துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நடிகை சிருஷ்டி இந்த திரைப்படத்தின் கதை மற்றும் காட்சியின் முக்கியத்துவத்தை ஏற்று ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருந்தார்.

நடிகை சிருஷ்டியின் துணிச்சலான நடிப்பை கண்ட ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவரை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை சிருஷ்டி ராஜாவுக்கு செக் திரைப்படத்தில் நடித்தது பற்றி மனம் திறந்துள்ளார். இயக்குநர் சாய் ராஜ்குமார் அந்த காட்சியை பற்றி கூறியிருந்தார். முதலில் நான் அந்த காட்சியில் நடிக்க தயங்கினேன். ஆனால் இயக்குனர் அந்த காட்சியின் முக்கியத்துவத்தையும் அந்த காட்சியை நாம் எவ்வாறு படமாக்க போகிறோம் என்பதையும் என்னிடம் விளக்கினார். ஆகையால் அந்த காட்சியில் நடிக்க நான் சம்மதித்தேன். 

மேலும் அந்த காட்சியில் நிர்வாணமாக நடிக்கும் போது எனக்கு பதட்டமாக இருந்தது. ஆனால் படத்தில் பார்க்கும் போதுதான் அந்த காட்சியின் முக்கியத்துவம் எனக்கு தெரிந்தது எனவும் நடிகை சிருஷ்டி கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் பெண்களுக்கு நடக்கும் பலாத்காரங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு ஆண்கள் தானே காரணம். ஆனால் பெண்களை தானே நாம் குறை கூறுகிறோம். இது தவறான செயல் எனவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.