நான் உயிரோட தான் இருக்கேன்! பதற்றத்தில் நடிகை சிம்ரன்! ஏன்னு தெரியுமா?

தான் உயிரோடு தான் இருப்பதாகவும், தான் சாகவில்லை என்றும் நடிகை சிம்ரன் கோபமாக தெரிவித்து வருகிறார்.


ஒடிசாவை சேர்ந்த பிரபல நடிகை சிம்ரன் சிங் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடல் ஒடிசாவின் மகாநதிக் கரையில் காயங்களுடன் மீட்கப்பட்டது. சிம்ரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இறுதியின் சிம்ரனின் கணவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

   சிம்ரனை தான் கொலை செய்யவில்லை என்றும் சிம்ரன் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது கணவர் கூறி வருகிறார். ஆனால் சிம்ரன் உடலில் காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் சிம்ரன் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து ஒடிசா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

   இந்த நிலையில் தமிழகத்தில் நடிகை சிம்ரன் மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஒடிசாவில உயிரிழந்த நடிகையின் பெயரும் சிம்ரன் என்பதால் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான சிம்ரன் தான் இறந்துவிட்டதாக பலரும் நினைத்துக் கொண்டனர். சிலர் சிம்ரன் தொலைபேசி எண்ணுக்கே தொடர்பு கொண்டு நீங்க உயிரோடு தான் இருக்கீங்களா? என்று கேட்க ஆரம்பித்துள்ளனர்.

   இதனால் பதறிப்போய் சிம்ரன் விசாரித்த போது தான் ஒடிசாவில் சிம்ரன் என்கிற பெயரில் பிரபல நடிகை ஒருவர் உயிரிழந்திருப்பது இங்குள்ள சிம்ரனுக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தான் உயிரோடு தான் இருப்பதாகவும், தான் சாகவில்லை என்றும் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் பலருக்கும் சூடாக பதில் அளித்து வருகிறார் சிம்ரன்.

   பெயர் குழப்பத்தால் ஒடிசாவில் இறந்த அந்த மாநில நடிகை சிம்ரனை தமிழக சிம்ரன் என்று பல ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் இறந்தது ஒடிசாவை சேர்ந்த நடிகை சிம்ரன் தான். நம்ம சிம்ரன் இங்கு சும்மா கும்முனு தான் இருக்காங்க.