நடிகர் விமல் நடிக்கும் "சண்டகாரி -தி பாஸ்"திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை ஸ்ரேயா நடிக்கிறார்.
36 வயசு ரஜினி பட நாயகியுடன் ஜோடி சேரும் விமல்!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சில வருடங்களுக்கு முன் ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை ஷ்ரேயா. 36 வயதான நடிகை ஷ்ரேயா நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது , இயக்குனர் ஆர்.மாதேஷ் இயக்கத்தில் நடிகர் விமலுடன் இணைந்து நடிக்கிறார். ஆர்.மாதேஷ் இதற்கு முன்னர் விஜய் நடித்த மதுர மற்றும் விஜயகாந்த் நடித்த அரசாங்கம் ஆகிய படங்களை இயக்கியவர் ஆவார்.
இவர் தற்போது மலையாளத்தில் நடிகர் திலீப் நடிப்பில் , ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் வெற்றிப்படமான மை பாஸ் என்ற படத்தை மையமாக வைத்து "சண்டகாரி -தி பாஸ்"படத்தை தமிழில் இயக்குகிறார்.
இந்த படத்தில் பிரபு, மகாநதி சங்கர், கே ஆர் விஜயா மற்றும் தேவேந்தர் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் . நடிகர் தேவேந்திர சிங் சில வருடங்களுக்கு முன்னே வெளியாகி மாபெரும் சாதனை படைத்த மாவீரன் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் படமாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.