அப்போது எனக்கு வயது 14..! ஒரு பூஜையில் இருந்தேன்..! வயதுக்கு வந்தது எப்படி என்பதை விரிவாக விளக்கிய பிரபல நடிகை..! யார் தெரியுமா?

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தன்னுடைய 14 வயதில் தான் சந்தித்த மாதவிடாய் நாட்களை பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


கன்னட திரையுலகில் வெளியான யூ டர்ன் என்ற திரைப்படத்தின் வாயிலாக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் நடித்த அந்த திரைப்படம் தமிழில் சமந்தா நடிப்பில் யூ டர்ன் என்ற பெயரில் வெளியானது. இதனைத் தொடர்ந்து நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், தமிழ் சினிமாவில் விக்ரம் வேதா, காற்றுவெளியிடை போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார். அதிலும் இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே தமிழில் உருவாக்கி கொடுத்தது என்று கூறினால் அது மிகையாகாது. 

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது புதிய பதிவு ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அதாவது நடிகை வெளியிட்டுள்ள அந்த பதிவில், எனக்கு அப்பொழுது 14 வயது இருக்கும். எங்கள் குடும்பத்தினருடன் இணைந்து பூஜை ஒன்றில் பங்கேற்றேன். அப்பொழுது என் அம்மா என்னுடன் வரவில்லை. அந்த நேரம் பார்த்து எனக்கு என்னுடைய மாதவிடாய் காலம் வந்துவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் கையில் சானிடரி நாப்கின் இல்லாமல் அவதிப்பட்டேன். மிகவும் வருத்தத்தோடு காணப்பட்டேன். இது குறித்து என்னுடைய ஆண்ட்டியிடம் கூறினேன்.

ஆண்ட்டியிடம் கூறியதைப் பார்த்து அருகில் இருந்த மற்றொரு நல்லுள்ளம் பொருந்திய பெண் ஒருவர், பரவாயில்லை குழந்தை உன்னை கடவுள் நிச்சயம் மன்னித்து விடுவார் என்று கூறினார். அதாவது அவர் மாதவிடாய் காலத்தில் நான் அந்த பூஜையில் கலந்து கொண்டதால் தான் அப்படி கூறினார். அந்த நாள் முதல் நான் பெண்ணியவாதியாக மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு நபராக மாறினேன் என்று நடிகை ஷ்ரத்தா அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நடிகை ஷ்ரத்தாவுக்கு ஆதரவாக பல கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது நடிகர் மாதவனுடன் இணைந்து மாறா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மலையாள சினிமாவில் துல்கர் சல்மான் நடித்த சார்லி என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த மாறா திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் திலீப் குமார் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் இயக்குனர் திலீப் குமார் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.