வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு முத்தம்..! கணவனை கையும் களவுமாக பிடித்த நடிகை..! பிறகு நடந்தது..?

வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு முத்தம் கொடுத்த கணவரை புரட்டி எடுத்த நடிகை ஷில்பா ஷெட்டியின் வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


நடிகை ஷில்பா செட்டி பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் கடந்த 1996ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா உடன் இணைந்து மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். அதேபோல் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் மேக்கோரீனா என்ற பாடலுக்கு நடனமாடி இருப்பார். 44 வயதாகும் நடிகை ஷில்பா ஷெட்டி எப்பொழுதும் தன்னுடைய சமூக வலைதளத்தில் தன்னுடைய ஃபிட்னஸ் சீக்ரெட்ஸ் பற்றிய பல வீடியோக்களை பதிவிட்டு வழக்கமாக கொண்டிருக்கிறார்.

நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது வெளியிட்டுள்ள டிக் டாக் வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது நடிகை வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில், ஷில்பா ஷெட்டி அலமாரியில் இருக்கும் துணிகளை அடுக்கி கொண்டிருக்கிறார். அப்போது அவரது கணவர் ராஜ் குந்த்ரா அவரை வேலை செய்ய விடாமல் முத்தமிட துடிக்கிறார். இதற்கு நடிகை ஷில்பா செட்டி உடனே வேலை செய்யும் நேரத்தில் முத்தமிடக் கூடாது என்று கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு கொண்டிருந்த வீட்டு வேலைக்காரப் பெண், நீங்களே சொல்லுங்கள் அம்மா.. வீட்டு வேலை செய்யும் பொழுது முத்தம் கொடுக்காதீங்க ன்னு கெஞ்சினா கூட விடமாட்டேங்கிறாரு என்று கூறுகிறார். இதனைக் கேட்ட நடிகை ஷில்பா ஷெட்டி அதிர்ச்சியடைந்து தன்னுடைய கணவரை புரட்டி புரட்டி எடுக்கிறார்.

இதனை வீடியோவாக பதிவு செய்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் நடிகை ஷில்பா ஷெட்டி. வீடியோ பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே 15 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களைக் கடந்துள்ளது. தற்போது நடிகை வெளியிட்டுள்ள இந்த புதிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. இதை பார்த்த மற்ற பாலிவுட் பிரபலங்களும் நடிகை ஷில்பா ஷெட்டி யையும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவையும் பாராட்டி வருகின்றனர்.