ஒரு அடி தூர இடைவெளி..! எதுவும் செய்யாமலேயே பிக்பாஸ் ஷெரீனை வெக்கப்பட வைத்த தனுஷ்..! 18 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவத்தின் புகைப்படம் உள்ளே!

பிரபல நடிகை மற்றும் பிக்பாஸ் புகழ் ஷெரின் நடிகர் தனுஷுடன் 18 வருடங்களுக்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


துள்ளுவதோ இளமை , விசில் போன்ற பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஷெரின் ஆவார். அதற்கு பின்பு ஒரு சில திரைப்படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை முன்னேறினார்.

நடிகை ஷெரின் இந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக ஒளிவுமறைவின்றி நடந்துகொண்டதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில் இவர் முதன்முதலாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் இருப்பது போன்ற இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.


18 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ஷெரின் ஒன்றாக இருப்பது போன்ற வெளியாகியுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.