அஜித் ரசிகர்களின் செயலால் திரையரங்கத்தை விட்டு அழுது கொண்டே வெளியே வந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
NKP FDFS! தல ரசிகர்கள் செயலால் திரையரங்கில் இருந்து அழுது கொண்டே வெளியேறிய நடிகை! வைரல் வீடியோ!
ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பிங்க். இந்த திரைப்படத்தின் தமிழ் மொழிபெயர்ப்புதான் நேர்கொண்ட பார்வை.
இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 8 (அதாவது இன்று) திரையிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தல அஜித்தின் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எவ்வாறு வரவேற்கிறார்கள் என்று அறிந்து கொள்வதற்காக திரையரங்கத்திற்கு சென்றுள்ளார் . அங்கு அவர் ரசிகர்களோடு ரசிகர்களாக சேர்ந்து திரைப்படத்தை பார்த்துள்ளார்.
அப்போது அஜித்தின் ரசிகர்கள் நேர்கொண்டபார்வை திரைப்படத்திற்கு அளித்த பேர் ஆதரவை பார்த்து மிகவும் நெகிழ்ந்து உள்ளார். இது மட்டுமில்லாமல் மனம் மகிழ்ந்து ஆனந்த கண்ணீருடன் திரையரங்கை விட்டு வெளியேறியுள்ளார்.