அஜித் மனைவி ஷாலினியுடன் செல்ஃபி! ரசிகர் வெளியிட்ட புகைப்படத்தின் அதிர்ச்சி காட்சி!

பள்ளிக் குழந்தைகளே பொருட்படுத்தாத நோக்கியாவின் சாதாரண பட்டன் வகை செல்ஃபோனை நடிகர் அஜீத், நடிகை ஷாலினி ஆகியோர் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.


தென்னகத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முக்கிய இடம் வகிக்கும் டாப் ஸ்டார்களில் அஜீத்தும் ஒருவர் ஆனால் தலைக்கனமற்ற அவரது அணுகுமுறையும், எளிமையும் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இந்நிலையில் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களும் அவரைப் போன்றே எளிமையானவர்கள் தான் என்றும் தங்கள் அந்தஸ்தை முன்னிலைப் படுத்தி ஆகாயத்தைப் பார்த்து நடப்பவர்கள் அல்ல என்றும் விளக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

ஷாலினி தங்கள் மகள் அனவ்ஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் எங்கு சென்றாலும் அவர்களை தல ரசிகர்கள் சூழ்ந்துவிடுவது வழக்கம். அண்மையில் ஷாலினி குழந்தைகளுடன் ஒரு பொது இடத்துக்குச் சென்றிருந்த போது ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள கோரிக்கை விடுத்தார்.

வெகு இயல்பாக ஷாலினி ஒப்புக் கொள்ள, மகிழ்ச்சியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட ரசிகர் அதனை சமூக வலைதளத்திலும் வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தில் தான் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான காட்சி காணக் கிடைத்தது. அந்தப் புகைப்படத்தில் ஷாலினியின் கையில் இருந்த செல்ஃபோன் கவனத்துக்குரியதாகியிருக்கிறது.

பள்ளிக் குழந்தைகளே சாதாரண செல்ஃபோன்களை அலட்சியப் படுத்திவிட்டு பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களை வைத்துக்கொண்டு சுற்றித் திரியும் நிலையில் ஷாலினி நோக்கியாவின் 3310 வகையிலான சாதாரண பட்டன் வகை செல்ஃபோனை வைத்திருந்தார். 

நடிகர் அஜீத்தும் நவீன வகை செல்ஃபோன்களை பயன்படுத்துவதில்லை என்றும் சாதாரண செல்ஃபோனை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசுவதற்கு தங்களுக்கு சாதாரண செல்ஃபோனே போதுமானது என்கின்றனர் அவர்கள்.

ஸ்மார்ட் ஃபோன்கள் உள்ளிட்ட நவீன வகை ஃபோன்களால் ஏற்படும் கதிர்வீச்சுத் தாக்குதலும் மன அழுத்தமும் சாதாரண ஃபோன்களால் ஏற்படுவதில்லை என்பதும் ஒரு அழுத்தமான காரணம். 

அதே நேரத்தில் செல்வந்தர்களாக இருக்கும் ஒரு காரணதாலேயே ஆடம்பரங்களை எல்லாம் வைத்திருக்க வேண்டும் என அவசியமில்லை என்ற கருத்தும் விளக்கப்படுகிறது.எல்லாம் சரிதான் அவர்கள் அந்தஸ்து ஊருக்கே தெரியும். அவர்கள் சாதாரண ஃபோன் வைத்திருந்தால் அது பெருமைக்குரிய செய்தியாகவே இருக்கலாம்.

ஆனால் நாமெல்லாம் அதனை பின்பற்றினால் நம்மை யார் மதிப்பார்கள் என சிலர் முனகுவதும் கேட்காமல் இல்லை. செல்பி எடுத்ததோடு இல்லாமல் ஷாலினியின் சிம்ப்ளிசிட்டியை வெளிச்சம் போட்டு காட்டிய அந்த ரசிகருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.