சினிமா, சீரியலில் மார்க்கெட்அவுட்..! புது பிசினஸில் களம் இறங்கிய பிரபல நடிகை! என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை சந்தோஷி.


தமிழ், தெலுங்கு , கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சந்தோஷி. பெரியதிரை போலவே சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்து நடிகை சந்தோஷி மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

இதனை தொடர்ந்து நடிகை சந்தோஷி தன்னுடன் நடித்த நடிகர் ஸ்ரீகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

 திருமணம் முடிந்தவுடன் சினிமா துறையை விட்டு விலகிய நடிகை சந்தோஷி தன் கணவருடன் இணைந்து பிசினஸ் செய்ய துவங்கினார். சென்னையில் பிளஷ் பூட்டிக் ஒன்றை துவங்கி வெற்றிகரமாக அதனை நடத்தியும் வருகிறார். நடிகை சந்தோஷி. இங்கு மணமகளுக்கு தேவையான ஆடை ஆபரணங்கள் ஆகியவை விற்கப்படுகின்றன . 

 மணப்பெண் அலங்காரம் திருமண விழாக்களில் புகைப்படம் எடுப்பது போன்ற பணிகளும் பிளஷ் நிறுவனம் சிறப்பான முறையில் செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை சந்தோஷி அழகுக்கலை குறித்த செமினார் ஒன்றை நடத்தினார். இந்த செமினாரில் பிரபல நடிகைகள் மற்றும் அழகுக்கலை நிபுணர்கள் போன்றோரும் பங்குபெற்றனர்.

நடிகையாக வலம் வந்த சந்தோஷி தற்போது தொழிலதிபராக வாழ்க்கையில் முன்னேறி அவரது ரசிகர்களின் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.