சிம்புவோட இன்னொரு முகம்..! பிக்பாஸ் தர்ஷன் காதலி வெளியிட்ட டாப் சீக்ரெட்!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிவு பெற்ற நிலையில், தர்ஷன்  காதலியும் மற்றும் நடிகையுமான சனம் ஷெட்டி நடிகர் சிம்புவை சந்தித்துள்ளார்.


தர்ஷன்  காதலியும் மற்றும் நடிகையுமான சனம் ஷெட்டி லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவை சந்தித்து அவருடன் செல்பி எடுத்து அதை இன்ஸ்டாகிராமில்  வெளியிட்டுள்ளார். நடிகை சனம் ஷெட்டி இன்ஸ்டாகிராமில் சிம்புவுடன் எடுத்த செல்பியை  வெளியிட்டது மட்டுமில்லாமல் நடிகர் சிம்புவை புகழ்ந்து தள்ளியுள்ளார் .

அந்தப் பதிவிற்கு கேப்சனாக, " நான் பலருடைய ரசிகையாக இருந்துள்ளேன் ஆனால் சிம்புவுக்கு மிகவும் உண்மையான ரசிகையாக இருந்துள்ளேன்., கடந்த சில நாட்களாக தான் அவரைப் பற்றி எனக்கு தெரியும் , ஆனால் அந்த சில நாட்களிலேயே அவரை பற்றி முழுமையாக என்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்று சனம் ஷெட்டி அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவரை போல் அன்பு செலுத்துவதற்கும் பாசம் காட்டுவதற்கும் வேறு யாரும் கிடையாது என்று சனம் செட்டி கூறியிருந்தார். அதே போல் எல்லோரையும் தனக்கு சமமாக நினைத்து மதித்து மரியாதை கொடுப்பதில் சிம்பு மிகப் பெரியவர் என்றும் கூறியிருந்தார். எனக்கும் தர்ஷன் இருக்கும் தேவையான நம்பிக்கைகளையும் உற்சாகம்களையும் அளித்து எங்களை ஊக்குவித்தவர் நடிகர் சிம்பு தான் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார் நடிகை சனம் ஷெட்டி. சினிமா மற்றும் வாழ்க்கை இரண்டிலும் நடிகர் சிம்புவின் அறிவைக் கண்டு வியக்கிறேன்.

நான் உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி சிம்பு எனவும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு  செய்துள்ளார். சனம் செட்டி சிம்புவுடன் எடுத்த புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.