கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது காதலருடன் நெருக்கமாக இருப்பது போன்று தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
என்ன தான் காதலனா இருந்தாலும் பொது இடத்திலேயாவா? பிக்பாஸ் நடிகையின் போட்டோ வைரல்!

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நடிகை சம்யுக்தா ஹெக்டேவை சமூகவலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர் . ஜெயம் ரவி நடிப்பில் இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ள கோமாளி படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே நடித்து வருகிறார்.
இவர் இதற்கு முன்பு கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் . நடிகை சம்யுக்தா ஹெக்டே ஜெர்மனி நாட்டை சேர்ந்த கிரீஸ் என்ற நபரை காதலித்து வருகிறார் . இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் தனது காதலருடன் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில்நடிகை சம்யுக்தா சமீபத்தில் தனது காதலருடன் பொது இடமான கடற்கரையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார் . இதை கண்ட ரசிகர்கள் பலர் இது போன்ற நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டால்தான் இவர்கள் காதலிப்பது தெரியுமா என்று இவர்களை வறுத்தெடுத்து வருகின்றனர்.
மற்றும் சில ரசிகர்கள் நடிகை சம்யுக்தா ஹெக்டேவிடம் நாங்கள் உங்களிடம் இன்னும் இது போல நிறைய எதிர் பார்க்கின்றோம் என்று கிண்டலாக கமெண்ட் அடித்து வருகின்றனர்,