முன்னாள் காதலனால் கிடைத்த அனுபவம்..! திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக வாய் திறந்த சமந்தா!

சென்னை: காதலனை நம்பி சென்றிருந்தால் சாவித்ரி போல ஏமாந்திருப்பேன், என்று நடிகை சமந்தா அதிரடியாகப் பேசியுள்ளார்.


பிரபல நடிகை சமந்தா, கடந்த 2017ம் ஆண்டு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், அதற்கு முன்பாக, அவர் நடிகர் சித்தார்த் உடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்வார்களோ என்று  எதிர்பார்த்த நிலையில் திடீரென சமந்தா சித்தார்த்தை விட்டு விலகியதோடு, நாக சைதன்யாவை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டார்.  

தனது காதல் வாழ்க்கை பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் சமந்தா மனம் திறந்துள்ளார். அதில், ''எனது முதல் காதல் மிகப் பெரிய தவறு. அதனை நான் செய்திருக்கக்கூடாது. நல்ல வேளையாக,  அதிலேயே முழுதாக மாட்டிக் கொள்ளாமல் மீண்டு வந்துவிட்டேன். அப்படி நான் முன்னாள் காதலனை நம்பி சென்றிருந்தால் நடிகை சாவித்ரிக்கு நேர்ந்தது போன்ற நிலைமை எனக்கும் வந்திருக்கும்,'' என்று  குறிப்பிட்டிருக்கிறார்.  

இது டோலிவுட், கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சாவித்ரி, ஜெமினி கணேசனுடன் லிவிங் டுகெதர் முறையில்  வாழ்ந்து வந்ததும், பின்னர் அவரை ஜெமினி கைவிட்டுச் சென்றதும், இதனால் மன விரக்தியடைந்த சாவித்ரி புகழின் உச்சியில் இருக்கும்போதே,  போதைக்கு அடிமையாகி உயிரை விட்டதும் இந்த நேரத்தில் நினைவுபடுத்த வேண்டியுள்ளது.