மாமனார் பிறந்த நாள் கொண்டாட்டம்! சமந்தா அணிந்து வந்த முகம் சுழிக்க வைக்கும் ஆடை! புகைப்படம் உள்ளே!

தெலுங்கு திரை உலகின் ஜாம்பவானாக கருதப்படும் நடிகர் நாகர்ஜுனா 60வது பிறந்தநாளை தன்னுடைய குடும்பத்தினருடன் மிக விமர்சியாக கொண்டாடினார் .


இவர் தனது 60 வது பிறந்த நாளை ஸ்பெயினில் கொண்டாடியதாக கூறப்படுகிறது. பல பிரபலங்களும் நாகார்ஜுனாவை சமூக ஊடகங்களில் வாழ்த்தினர். முக்கியமாக நடிகை மற்றும் மருமகளான சமந்தாவிடம் இருந்து மிகவும் அபிமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்தது. 

நாகார்ஜுனாவின் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டு, அதில் நடிகர் நாகர்ஜுனா நீச்சல் குளத்தில் இருப்பதைக் காணலாம். மந்தா அந்த புகைப்படத்திற்கு கேப்சனாக "எல்லோரும் நீங்கள் தேடுவதைக் கண்டுபிடித்தீர்கள் ...

உங்களைச் சுற்றி இருப்பதால் நான் உங்களைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொண்டேன் .. இது உங்கள் அழகான மனம், உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் கொண்டு வரும் படைப்பாற்றல் மற்றும் நீங்கள் விரும்பும் மக்களின் வாழ்க்கை ... நீங்கள் உங்கள் வயதை தோற்கடித்தீர்கள் என் மாமா ... # மகிழ்ச்சியான பிறந்த நாள். தலைமுறைக்குப் பின் தலைமுறையை நீங்கள் தொடர்ந்து ஊக்குவிப்பீர்கள்..". என்று அந்த செய்தியில் கூறியிருந்தார்.

இதேபோல் நடிகை சமந்தா, நாகர்ஜுனா மற்றும் தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் நடிகை சமந்தா பிங்க் நிறத்தில் குட்டையான ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்திருந்தார். இந்த புகைப்படத்தில் மிகவும் அழகாக காட்சி அளித்திருந்தார் நடிகை சமந்தா.

இந்த ஆடை அணிந்து வந்த சமந்தாவை பலரும் மாமனார் பிறந்த நாளுக்கு இப்படியா டிரஸ் போடுவது என்று விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். மேலும் அந்த ஆடை முகம் சுழிக்க வைக்கும் வகையில் இருப்பதாகவும் கமெண்ட் அடித்தனர்.