எனக்கு ரெண்டு காதலர்கள் இருக்காங்க! கல்யானம் ஆன சமந்தாவின் ஷாக் தகவல்!

தனக்கு இரண்டு காதலர்கள் இருப்பதாக நடிகை சமந்தா ஷாக்கிங்கான தகவலை வெளியிட்டுள்ளார்.


  தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு மார்க்கெட் கிடையாது என்கிற சென்டிமென்டை தமிழ் சினிமாவில் முதலில் உடைத்தது சமந்தா தான். திருமணம் ஆன பிறகு நடிகைகளுக்கு படத்தில் நடிக்கவே வாய்ப்பு கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அக்கா, அண்ணி வேடம்தான்.

   ஆனால் கல்யானத்துக்கு பிறகும் முன்னணி நடிகர்களுடன் சமந்தா ஜோடி போட்டு வருகிறார். அதிலும் சமந்தாவுடன் நடிக்க தற்போதும் முன்னணி நடிகர்கள் பலர் கால்ஷீட் கேட்டு காத்திருக்கிறார்கள். அதே சமயம் சமந்தாவோ நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமந்தா கதையின் நாயகியாக நடித்து வெளியான யு டர்ன் திரைப்படம் வரவேற்பை பெற்றது.

   இதே போல் 2019ம் ஆண்டிலும் தொடர்ந்து பல படங்களில் நடிக்க உள்ளதாக சமந்தா கூறியுள்ளார். இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட் தான் ரசிகர்களை முதலில் அதிர்ச்சி அடைய வைத்தது. ட்வீட்டை முழுமையாக படித்த பிறகு தான் ரசிகர்கள் அப்பாடா இவ்வளவு தானா என்று சமாதானம் அடைந்தனர். காரணம் அந்த ட்வீட்டில் தனக்கு இரண்டு காதலர்கள் இருப்பதாக சமந்தா கூறியிருந்தார்.

   என்னது கல்யாணம் ஆன பிறகும் இரண்டு காதலர்களா? என்று ரசிகர்கள் வாய்பிளந்தனர். ஆனால் அதற்கு அடுத்த வரியிலேயே என்னுடைய காதலர்கள் வேறு யாரும் இல்லை என்னுடைய கணவனும், என்னுடைய சினிமாவும் தான் என்று கூறி ரசிகர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளார் சமந்தா. இனிமேல் இப்படி ட்வீட் போடும் போது முதலிலேயே விளக்கமாக சொல்லிவிடுங்கள் சமந்தா என்று ரசிகர்கள் அவருக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.