கவர்ச்சி உடையில் சேரன் வீட்டுக்கு சென்ற பிக்பாஸ் நடிகை! யார்? ஏன் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் இயக்குனர் சேரனுக்கு சர்ப்ரைஸாக கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் இயக்குனர் சேரன் ஆவார். அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளராக பங்கேற்ற அனைவருடனும் சேரன் நல்லவிதமான உறவைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான சாக்ஷி அகர்வால் மற்றும் சேரன் ஆகிய இருவரும் நல்ல நண்பர்களாக பழகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சி முடிந்த பின்பும் போட்டியாளர்கள் அனைவருமே மற்ற போட்டியாளர்களின் வீட்டிற்கு சென்று மகிழ்ச்சியாக தங்களுடைய அன்பை பரிமாறி வருகின்றனர். அந்தவகையில் இயக்குனர் சேரனின் பிறந்த நாளான நேற்றைய முன் தினம் நடிகை சாக்ஷி அகர்வால் அவரது இல்லத்திற்கு சர்ப்ரைஸாக சென்றார். அதனை பார்த்த சேரன் மகிழ்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். 

பிறந்தநாளை முன்னிட்டு சேரனின் ரசிகர்கள் அவருக்கு ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இயக்குனர் சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்பு தன்னுடைய புதிய திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.