அது தெரியுற தாவணி கட்டணும்..! நெருக்கடி கொடுத்த டைரக்டர்..! மலர் டீச்சர் என்ன செஞ்சாங்க தெரியுமா?

திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சாய்பல்லவியை பிரபல இயக்குனர் ஒருவர் ஸ்லீவ்லெஸ் உடையை அணிய வேண்டுமென்றும், அது தெரிய தாவணி அணியவேண்டும் என்றும் கட்டளை இட்டதால் தான் அந்த உடையை அணிந்ததாக நடிகை சாய் பல்லவி பரபரப்பு தகவலை வெளியிட்டிருக்கிறார்.


நடிகை சாய் பல்லவி மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மலையாளத்தில் வெளியான இந்தத் திரைப்படத்திற்கு தமிழிலும் ஏகோபித்த வரவேற்பு. தமிழ் சினிமாவில் நடிக்காமலேயே தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் நடிகை சாய் பல்லவி. இவர் எப்போது தமிழ் சினிமாவில் கால் பதிப்பார் என ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் கரூ என்ற திரைப்படத்தில் நடித்து அவர்களின் ஏக்கங்களை போக்கினார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷுடன் இணைந்து மாரி 2 திரைப்படத்தில் நடித்து மீண்டும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். அதிலும் அவர் நடனமாடிய ரவுடி பேபி பாடல் பயங்கர ஹிட் அடித்தது. இதனைத்தொடர்ந்து இவரது நடிப்பில் உருவான ஃபிடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இத்திரைப்படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்கினார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை சாய்பல்லவி இந்த திரைப்படத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் பொதுவாகவே எனக்கு குட்டையான ஆடைகளை அணிவதில் விருப்பம் கிடையாது. ஒருவேளை நான் அப்படி அணிந்தாலும் அது எனக்கு வசதியாகவும் இருக்காது. ஆகையால் நான் முழுவதுமாக என் திறமையை நம்பிதான் கதைகளைத் தேர்வு செய்வேன். மாறாக கவர்ச்சியை காட்டி கதைகளில் நடிக்க மாட்டேன் என்றும் கூறினார். 

மேலும் பேசிய அவர், ஃபிடா திரைப்படத்தில் தன்னை தாவணி கட்டும் மாறும் , ஸ்லீவ்லெஸ் உடைகளை அணிந்து கொள்ளுமாறும் இயக்குனர் சேகர் கம்முலா வற்புறுத்தியதாக கூறியிருக்கிறார். அவர் கூறியதாக அந்த உடைகளை நான் அந்த திரைப்படத்தில் அணிந்திருந்தேன். ஆனால் இனிமேல் பட்டு இம்மாதிரியான உடைகளை என்னுடைய வரப்போகும் திரைப்படங்களில் அணிய மாட்டேன் என்று நடிகை சாய் பல்லவி கூறியது குறிப்பிடத்தக்கது. 

நடிகை சாய் பல்லவி பேசிய இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.