தனுஷ் வச்ச வசியம்! காலை சுற்றி சுற்றி வரும் மலர் டீச்சர்!

மாரி 2 படத்தில் நடித்துள்ள பிரேமம் மலர் டீச்சர் சாய் பல்லவி சென்னையை காலி செய்யாமல் இங்கேயேடேரா போட்டுள்ளதற்கு காரணம் தனுஷ் என்று கிசுகிசு வெளிவர ஆரம்பித்துள்ளது.


கடந்த 2015ம் ஆண்டு வெளியான மலையாளப் படம் பிரேமம். இந்த படத்தில் ஹீரோ நிவின் பாலியை விட தமிழக ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டவர் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி தான். தமிழகத்தை கோவையை சேர்ந்த இவர் பிரேமம் படத்தில் கேரளாவில் தமிழ் டீச்சராக நடித்திருப்பார். மேலும் படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டிருப்பார்.

   பிரேமம் வெளியான பிறகு மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவிக்கு செம கிராக்கி ஏற்பட்டது. ஆனால் படத்தை மிகவும் கவனமாக தேர்வு செய்தார் சாய் பல்லவி. 2015ம் ஆண்டு பிரேமம் வெளியான நிலையில் 2016ம் ஆண்டு ஒரே ஒரு படத்தில் தான் நடித்தார். பிறகு தெலுங்கில் வாய்ப்பு குவிந்த காரணத்தினால் அந்த பக்கம் ஒதுங்கினார்.

   ஆனால் கவர்ச்சி காட்ட மாட்டேன், தொப்புள் தெரிவது போல் உடை அணியமாட்டேன், டைட்டாக டிரஸ் போடமாட்டேன், நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று பல கண்டிசன்களுடன் தான் சாய் பல்லவி படங்களில் ஒப்பந்தம் ஆனார். இந்த கன்டிசன்களுக்கு ஒப்புக் கொண்டாலும் கூட படப்பிடிப்பு தளத்தில் மிகவும் ரூடாக நடந்து கொள்வதாக சாய் பல்லவி மீது புகார் எழுந்தது.

   தமிழில் தியா என்கிற ஒரு படத்தில் நடித்தார் சாய் பல்லவி. ஆனால் அந்த படம் வெற்றி பெறவில்லை. இதன் பிறகு தான் தனுசுடன் மாரி 2 படத்தில் சாய் பல்லவி ஒப்பந்தம் ஆனார். இந்த சமயத்தில் தான் சாய் பல்லவியின் கேரக்டரே மாறிவிட்டது என்கிறார்கள் இன்டஸ்ட்ரீயில். தனுசுடன் மிக நெருக்கமான ஒரு பாடல் காட்சியில் மாரி 2 படத்தில நடித்துள்ளாராம் சாய் பல்லவி.

   இதனை கூட பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் படம் வெளியான அன்று சென்னையில் தனுசுடன் தியேட்டர் தியேட்டராக ஏறி இறங்கியுள்ளார் சாய் பல்லவி. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவே அவ்வளவு பிகு செய்யும் சாய் பல்லவி தனுசுடன் தியேட்டர்களுக்கு சென்று வந்தது தான் தற்போது தமிழ் சினிமா உலகில் டால்க் ஆப் த டவுன். மேலும் தெலுங்கிலும் சாய் பல்லவி நடித்துள்ள ஒரு படம்இன்று வெளியாகியுள்ளது.

   தமிழை விட தெலுங்கில் சாய் பல்லவிக்கு அதிக சம்பளம். அப்படி இருந்தும் ஐதராபாத் செல்லாமல் சென்னையில் தனுசை சாய் பல்லவி சுற்றி சுற்றி வருவதற்கு காரணம் வழக்கம் போல் தனது நாயகிகளுக்கு வைக்கும் வசியத்தை தனுஷ் வைத்துவிட்டார் என்று கிசுகிசுக்கிறார்கள் திரையுலகில்.