3வது முறை கர்ப்பம்! கணவன் தள்ளிவிட்டு பனிக்குடம் உடைந்தது! குழந்தையையும் இழந்தேன்! பிக்பாஸ் ரேஷ்மாவுக்கு நேர்ந்த பரிதாபம்!

பிக்பாஸ் புகழ் நடிகை ரேஷ்மா தன்னுடைய மூன்றாவது குழந்தையை இழந்த சோகத்தை சமீபத்தில் நடந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.


பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மாவும் ஒரு   போட்டியாளராக பங்கேற்றார். இவர் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இதனை அடுத்து தற்போது நடிகை ரேஷ்மா நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர்   தன் வாழ்வில் தனக்கு ஏற்பட்ட சோகங்களையும்  அனுபவங்களையும் பற்றி பகிர்ந்து கொண்டார்.  ரேஷ்மா அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பிறகு இவரும் அவரது கணவரும் அமெரிக்காவில் வாழ்ந்து வந்தனர்.

அவ்வப்போது சிறுசிறு சண்டைகளை சந்தித்து வந்த இந்த தம்பதியினர் வாழ்வில் ஒரு நாள் மிகப்பெரிய பிரச்சனை நடந்துள்ளது . அப்போது நடிகை ரேஷ்மா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் . இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் ரேஷ்மாவின் கணவர் அவரை கீழே தள்ளி இருக்கிறார்.

அதிர்ச்சியில் கீழே விழுந்த ரேஷ்மா  மயக்கம் அடைந்துள்ளார். மேலும் அதிர்ச்சியில் ரேஷ்மாவின் பனிக்குடம் உடைந்து உள்ளது . இதனால் ரத்தம் நிற்காமல் சென்று உள்ளது.  இதனை அறிந்த நடிகை ரேஷ்மா யாரும் உதவிக்கு இல்லாத காரணத்தால் தானே தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார்.

அப்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ரேஷ்மாவுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போகிறது என்று கூறியுள்ளனர். அதன்படியே ரேஷ்மாவுக்கு  குழந்தையும் பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும் எவ்வளவோ முயற்சி செய்தும் மருத்துவர்களால் அந்த குழந்தையை காப்பாற்ற இயலவில்லை .

ஏற்கனவே தன்னுடைய இரண்டாவது குழந்தையை இழந்த ரேஷ்மாவால்  மீண்டும் ஏற்பட்ட சோகத்திலிருந்து மீள முடியவில்லை. " என்ன தான் இந்த வாழ்க்கை ?இந்த வாழ்க்கையை வாழ பிடிக்கலை .."என்று இருந்த நிலையில் தன்னுடைய முதல் மகனுக்காக ரேஷ்மா தன் மனதை திடப்படுத்தி உள்ளார்  . தற்போது அவர் தன்னுடைய  சோகங்களில்  இருந்து சற்று வெளிவந்து உள்ளதாக கூறியுள்ளார்.