பிக்பாஸ்ல சொன்னது என்ன? இப்போ செய்றது என்ன? வைரலாகும் புஷ்பா புருசன் நடிகையின் புகைப்படம் உள்ளே!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர் மத்தியில் பிரபலமடைந்த ரேஷ்மா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிக்பாஸ்ல நீங்க சொன்னது என்ன ? தற்போது செய்யறது என்ன? என கேள்விகளை எழுப்பியுள்ளது?


பொதுவாகவே நடிகைகள் சினிமாவில் பட வாய்ப்புக்காக தங்களுடைய கவர்ச்சி புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் முன்னணி கதாநாயகர்களையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் திரைத்துறையில் அறிமுகம் ஆவதற்கு முன்பாக ஏர் ஹோஸ்டஸாக பணியாற்றி வந்தார்.

இதனைத் தொடர்ந்து சினிமா மீது கொண்டிருந்த ஆர்வத்தினால் திரையுலகில் நடிப்பதற்கு முடிவெடுத்தார். ஆனால் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக செய்திவாசிப்பாளர் , நிகழ்ச்சித் தொகுப்பாளர் , சீரியல் நடிகை என பல்வேறு பரிமாணங்களை காட்ட துவங்கினார். கடைசியில் திரைப்படத்திலும் நடித்து நடிகையாக மாறினார்.

இவர் முதன்முதலில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியலில் அறிமுகமானார். தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடிக்கத் துவங்கினார். பின்னர் திரைப்படம் ஒன்றில் நடித்து பெரிய திரையில் கால்பதித்தார். ஆனால் இவர் நடித்த முதல் படம் அவருக்கு போதிய வெற்றியை பெற்றுத் தரவில்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் இடம்பெறும் புஷ்பா புருஷன் யாரு காமெடி சீனில் வரும் புஷ்பா கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மா நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நடித்தது மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார்.

இதேபோல் கடந்த ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற போது தன் வாழ்க்கையில் நடைபெற்ற பல சோகங்களையும் தான் அனுபவித்த கஷ்டங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார். அப்படியாக பேசும்பொழுது 2 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளதாகவும் மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் கூறினார் ரேஷ்மா.

அதுமட்டுமில்லாமல் தான் கர்ப்பமாக இருந்தபோது தன்னுடைய கணவர் தன்னை துன்புறுத்தியதால் குறை மாதமாக ஒரு குழந்தை பிறந்ததாகவும் அதனால் அந்த குழந்தை ஆட்டிஸம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும் கூறினார். மட்டுமில்லாமல் மற்றும் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்து அந்தக்குழந்தையின் சமாதி அமெரிக்காவில் இருப்பதாகவும் அவர் கூறினார். 

ரேஷ்மாவின் இந்த பர்சனல் விஷயங்கள் அவர் மீது மக்களுக்கு அனுதாபத்தையும் அன்பையும் ஏற்படுத்தி தந்தது. தற்போது நடிகை ரேஷ்மா தொடர்ந்து செய்து வரும் ஒருசில செயல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது முன்னணி கதாநாயகிகளுக்கு மிகவும் டஃப் கொடுக்கும் அளவில் இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் உள்ளாடைகள் அணியாமல் மிகவும் லோ நெக் கொண்ட உடை அணிந்து கொண்டு தொடைகளையும் காட்டிக்கொண்டு இருக்குமாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்த படத்தை பார்த்த நெட்டிசன்கள் சிலர் , "பிக் பாஸ் நீங்க சொன்னதுக்கும்.. இப்போ நீங்க செய்வதற்கும் சம்பந்தமே இல்லை" என்று கமென்ட் செய்துள்ளனர்.


அதுமட்டுமில்லாமல் நடிகை ரேஷ்மா தற்போது மூன்றாவதாக வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இவர் வெளியிட்டுள்ள பல புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.