என்னுடைய குழந்தைக்கு குழந்தை பிறக்கப்போகிறது! கமல் பட நடிகை வெளியிட்ட சீமந்த புகைப்படம் வைரல்!

பாலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையான ரவீனா தந்தன் தன்னுடைய வளர்ப்பு மகளான சாயாவிற்கு சீமந்த விழாவை நடத்தினார்.


நடிகை ரவீனா தந்தன் தன்னுடைய வளர்ப்பு மகளான சாயாவிற்கு கடந்த வாரம் சீமந்த விழாவை நடத்தினார். சீமந்த விழாவின் போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் நடிகை ரவீனா. அதோடு கேப்சனாக," என் குழந்தையின் என் குழந்தை " என்று பதிவிட்டிருந்தார்.

இந்த சீமந்த விழாவிற்கு சாயா மருண் கலரில் நீளமான உடை அணிந்திருந்தார். இந்த விழாவில் நடிகை ரவீனாவின் மற்றொரு வளர்ப்பு பிள்ளையான பூஜாவும் கலந்து கொண்டார். சாயா, ஷான் மெண்டிஸ் என்பவரை கடந்த 2011-ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்துகொண்டார்.

நடிகை ரவீனா கடந்த 1995ஆம் ஆண்டு சாவையும் பூஜாவையும் தன் மகள்களாக தத்தெடுத்துக் கொண்டார். இதற்குப்பின் ரவீனா தயாரிப்பாளர் அனில் தந்தானே திருமணம் செய்து கொண்டார் . இவருக்கு ரஷ்யா மற்றும் ரன்வீர் என இரு குழந்தைகள் உள்ளனர். 

நடிகை ரவீனா சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றவர் ஆவார். இவர் கடைசியாக கேஜிஎப் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.