புளியமரத்தில் சடலமாக தொங்கிய நடிகையின் கணவர்..! சற்று முன் வெளியான பதற வைக்கும் காரணம்!

பிரபல நடிகை ராகவியின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் சினிமாவில் ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ராகவி , பின்னர் ஒன்ஸ்மோர் மருதுபாண்டி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து சின்னத்திரையிலும் திருமதி செல்வம் மகாலட்சுமி போன்ற சீரியல்களில் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டவர் நடிகை ஆவார்.

நடிகை ராகவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் சசிகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடன் சுமை காரணமாக தனக்கு சொந்தமான ஸ்டுடியோவில் இருந்த கேமராவை அடகு வைத்திருக்கிறார் சசிகுமார். இதனைத்தொடர்ந்து சசிகுமாருடன் வேலைபார்க்கும் மகேஷ் என்பவர் சசிகுமார் ஒரு கேமரா திருடன் என்று சமூகவலைத்தளத்தில் தகவல் பரப்பி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சோகம் தாங்காமல் கடந்த ஒன்பதாம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சசிகுமார் , வேலூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டையில் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியில் இருந்த மரத்தின் கிளையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக இருந்த சசிகுமாரை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . தூக்கில் தொங்கிய நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டபோது அவர் சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் ஒளிப்பதிவாளர் சசிக்குமார் என்று தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து தகவலறிந்து வந்த சசிகுமாரின் மனைவி நடிகை ராகவி தற்கொலை செய்துகொண்டது தன்னுடைய கணவர்தான் என்று உறுதிப்படுத்தினார். மேலும் தன்னுடைய கணவர் மரணத்திற்கு மகேஷ் வாட்ஸப்பில் கேமரா திருடன் என்று சசிகுமார் கூறியது தான் மிக முக்கியமானது என்று போலீசாரிடம் கூறியிருந்தார்.

நடிகை ராகவியின் கணவர் சசிகுமாரின் உடல் பிரேத பரிசோதனை முடித்த பின்பு அவரது மனைவியிடம் வழங்கப்படும் எனவும் போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர் . மேலும் சசிகுமாரின் இறப்பிற்கான காரணம் என்ன என்பதையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் . இது கொலையா அல்லது தற்கொலையா என்பதையும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.