இரவு அறைக்கு வரட்டுமா என்றார்..! அந்த இடத்தில் தடவிக் கொடுக்கவா என கேட்டார்..! பிரபல நடிகர் குறித்து கபாலி நடிகை வெளியிட்ட தகவல்!

அந்த இடத்தில் வலியால் அவதிப்பட்டு வந்திருந்த நடிகை ராதிகா ஆப்தேவிடம் நான் வேண்டுமென்றால் கை வைத்து தடவி விடட்டுமா என்று கேட்ட பிரபல நடிகரை குறித்த பகீர் தகவலை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.


பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார். கபாலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தன் மூலமாக மிகவும் பரிச்சயமான நடிகையாக தமிழ் திரை ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

பொதுவாகவே பாலிவுட் நடிகைகள் இடம் கவர்ச்சிக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. அந்த வகையில் நடிகை ராதிகா ஆப்தேவும் கவர்ச்சி புயலாக வலம் வருகிறார். இந்த நடிகையின் கவர்ச்சியில் ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர் என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே தற்போது வெளியிட்டுள்ள தகவல் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாலிவுட் திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை ராதிகா ஆப்தே தமிழில் ஒரு சில திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அப்படியாக தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த பொழுது பிரபல முன்னணி நடிகர் ஒருவர் தன்னிடம் அசிங்கமாக பேசியதைப் பற்றி பேட்டி ஒன்றில் மனம் திறந்து கூறியிருக்கிறார்.

ஒரு நாள் சூட்டிங் நடைபெற்ற பொழுது எனக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டது. அந்த வலியோடு நான் அன்றைய தினம் ஷூட்டிங்கை முடித்துவிட்டு லிஃப்டில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த பிரபல நடிகர் என்னோடு லிஃப்டில் ஒன்றாக இணைந்து வந்தார். அப்போது அவர் இரவில் உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டும் என்றால் என்னை கேளுங்கள் நான் செய்து தருகிறேன் என்று அசிங்கமாக பேசினார். அதுமட்டுமில்லாமல் முதுகில் நான் வேண்டுமென்றால் கை வைத்து தடவி விடட்டுமா என்று கேட்டார் என நடிகை ராதிகா ஆப்தே கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த நடிகருக்கும் நடிகை ராதிகா ஆப்தேவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்த அவரிடம் தவறாக நடந்துகொண்ட அந்த நடிகர் யார் என்று பலரும் குழம்பி வருகின்றனர்.