4000 பேர் வேலை பாக்குறாங்க! பிஸ்னச பார்க்கவே டைம் சரியா இருக்கு! மிரள வைக்கும் ராதா!

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதா.


தன்னுடைய அசராத நடிப்பாலும் அழகான தோற்றத்தாலும் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை ராதா. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ராதா கடந்த சில ஆண்டுகளாகவே சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.

இருப்பினும் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வந்தார். எவர்கிரீன் நடிகையான ராதா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார் . அப்போது அவர் தன்னுடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை பற்றியும் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பை இயக்குனர் இமயம் பாரதிராஜா எனக்கு தந்தது மிகப்பெரிய வரம் என்றே கூறவேண்டும்.

அதற்குப்பின் பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன் . சுமார் பத்து வருடத்திற்கு மேல் சினிமாவில் பிஸியாக நடித்து வந்துள்ளேன். அதற்கு பின்பு தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து திருமண வாழ்க்கையில் இணைந்தேன். அதற்குப்பின் எனக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. இதனால் சினிமாவை விட்டு சிலகாலம் விலகி இருக்கலாம் என்று முடிவெடுத்து ஒதுங்கி இருந்தேன்.

பின்பு என் கணவரின் ஹோட்டல் பிஸினஸ் எடுத்து நடத்த ஆரம்பித்தேன் இப்போது எங்களுக்கு கேரளாவில் மூன்று 5 ஸ்டார் ஹோட்டல்கள் உள்ளன. இந்த 3 ஹோட்டல்களை கவனித்துக் கொள்வதே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது . ஆகையால் என்னால் சினிமாவில் நடிக்கும் வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.

இதேசமயம் என்னுடைய மகள் கார்த்திகாவும் இளைய மகள் துளசியும் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு ஒரு சில படங்களில் நடித்தனர். தற்போது அவர்களும் அவர்கள் வேலைகளில் பிஸியாக உள்ளனர். கூடிய சீக்கிரம் ஹோட்டல் பிசினஸ் அனைத்தையும் எங்களுடைய மூன்றும் குழந்தைகள்தான் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள்.

அவர்களிடம் இந்த பிசினஸ் ஒப்படைத்து பின்புதான் எங்களுக்கு ஓய்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன். இந்த ஹோட்டல் பிசினஸ் மட்டுமில்லாமல் எங்களுக்கு கேரளாவில் பல ரெஸ்டாரன்ட் , ஸ்கூல் மற்றும் சினிமா தியேட்டர் என பலவற்றையும் நான் தற்போது கவனித்து வருகிறேன் . தற்போது எங்களிடம் 4000 கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். 

இதுமட்டுமில்லாமல் நடிகை ராதா பேசுகையில் நான் சினிமாத்துறையில் நடிக்காமல் இருந்தாலும் சினிமாவிற்கு நான் மிகப்பெரிய கடமை பட்டுள்ளேன் என்று கூறினார் .