உன்னோட அந்த வீடியோ விரைவில் ரிலீஸ்..! பிரபல தமிழ் நடிகையை பதற வைத்த 4 பேர்..! ஆனால்?

பிரபல நடிகை பூர்ணாவிற்கு போன் செய்து மிரட்டல் கொடுத்து வந்த நான்கு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


நடிகர் பரத் கதாநாயகனாக நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதன்பிறகு இவர் துரோகி, வேலூர் மாவட்டம், ஜன்னல் ஓரம், தகராறு, சவரக்கத்தி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது லாக்கப், தலைவி போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் ஏராளமான தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சமீபத்தில் நடிகை பூர்ணாவிற்கு சிலர் போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டு விடுவேன் என்று பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது. இதை அறிந்த நடிகை பூர்ணாவின் தந்தை போலீசாரிடம் நடந்த சம்பவம் பற்றி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கொச்சி மாராடு காவல்துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இந்த சம்பவத்திற்கு காரணமான 4 பேரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட 4 பேருமே உண்மையை ஒத்துக் கொண்டதால் அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் பற்றி பேசிய நடிகை பூர்ணா எனக்கு போன் மூலம் மிரட்டல் வந்தபோது இதுபோன்ற சம்பவம் யாருக்கும் நடக்கக்கூடாது என்பதற்காக தனது தந்தையிடம் நான் நடந்ததைக் கூறி அவர்கள் மீது போலீசாரிடம் புகார் கொடுக்க நான் தான் கூறினேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.