நடிகை பூஜா பட் , தான் ஒரு காலத்தில் குடிக்கு அடிமையாக இருந்ததைப் பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எந்நேரமும் குடி, போதையில் தான் இருப்பேன்..! ஆனால்..? பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
நடிகை பூஜா பட் , தன் தந்தை மகேஷ் பட் திரைப்படமான சட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பூஜா பட் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது . அந்த பதிவில் நடிகை பூஜா தன் வாழ்க்கையில் ஏற்பட்ட பல சோகமான சம்பவங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதாவது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக எந்நேரமும் குடிபோதையில் இருந்ததாக அந்த பதிவில் கூறியிருந்தார்.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பாக , குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சரியாக இரண்டு வருடம் 10 மாதங்களுக்கு முன்பு தான் எப்படி குடிக்கு அடிமையாக இருந்ததைப் பற்றியும் அதனால் தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். உங்களில் யாராவது யாரும் இல்லாமல் தனியாக இருப்பதை எண்ணி வாழ்க்கையுடன் போராடி கொண்டிருக்கிறீர்களா?
நீங்கள் ஒன்றும் தனிநபர் இல்லை என்பதை முதலில் நம்புங்கள் என்னால் அதை செய்ய முடிந்தது உங்களால் அதை செய்ய இயலும். மேலும் உங்களது வாழ்க்கையில் எங்காவது ஒரு இடத்தில் சரிவை சந்தித்தீர்கள் என்றால் தயங்காமல் நிமிர்ந்து நின்று மீண்டும் ஓட ஆரம்பியுங்கள். நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். என்னால் இதை செய்ய முடிந்தது. உங்களால் கண்டிப்பாக இதனை செய்ய இயலும் என்று அந்த பதிவில் கூறியிருந்தார்.
மேலும் நடிகை பூஜா பட் கடந்த 2017 ஆம் ஆண்டு பேட்டி ஒன்றில் பேசுகையில் தனக்கு குடிப்பழக்கம் இருப்பதை பற்றி முதன்முதலில் வெளி உலகிற்கு கூறினார். தன் குடிபோதைக்கு அடிமையானதைப் பற்றிக் கூறும்போது தன் வாழ்வில் ஏற்பட்ட சோகங்களை நடிகை பூஜா பகிர்ந்துகொண்டார். நடிகை பூஜா குடிபோதைக்கு அடிமையான அதற்கு காரணம் யாருமே இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்தது தான் என்று மிகுந்த மன வேதனையுடன் கூறியிருந்தார்.
நாம் அனைவருமே ஒருகட்டத்தில் தனியாக வாழ்கிறோம் என்ற மன நிலைக்கு தள்ளிவிடபடுகிறோம் . அந்நிலையில் ஒருசிலருக்கு தோள் கொடுக்க அவரது காதலர்கள் இருப்பார்கள். ஆனால் மற்றவர்களுக்கு தோள் கொடுக்க மதுபானம் தான் இருக்கிறது என்று கூறினார். ஆரம்பத்தில் மிகவும் சந்தோஷமான நிலையைத்தான் குடி போதை தரும் ஆனால் போகப் போக அது நண்டின் வலைக்குள் தலையை விட்டது போல நம்மால் மீண்டு வர இயலாத சோகத்தை நமக்கு அளிக்கிறது என்று நடிகை பூஜா பட் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
நடிகை பூஜா பட் தற்போது சடக் 2 என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவரது சகோதரியான அலியாபட் மற்றும் ஆதித்யா ராய் கபூர் போன்றோரும் நடித்து வருகின்றனர் திரைப்படமானது வரும் 2020-ம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி திரையிடப்படும் என்று படக்குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.