ஹீரோவுக்கு முத்தம் கொடுத்தால் எல்லாத்துக்கும் தயார் என அர்த்தமா? நடிகை பாயல் செம ஹாட் பேட்டி!

ஆர்எக்ஸ் 100 திரைப்படத்தின் மூலமாக சினிமா உலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை பாயல் ராஜ்புத் ஆவார்.


மீண்டும் இவர் எப்போது நடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். நடிகை பாயல் தற்போது ஆர்.டி.எக்ஸ் லவ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த புதிய திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. மேலும் இந்த டீசர் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆர்எக்ஸ் 100 திரைப்படத்திற்குப் பிறகு பாயல் ராஜ்புத் தனக்கேற்பட்ட அனுபவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். அந்த நேர்காணலில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆர்எக்ஸ் 100 திரைப்படத்தில் நடிகை பாயல் ராஜ்புத் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இந்து என்ற கதாபாத்திரத்தை ஏற்று இவர் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நடித்த போது இவர் கவர்ச்சியாக நடித்ததை வைத்து கொண்டு பலரும் இவரை சமூக வலைத்தளத்தின் மூலம் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இதனை பற்றி நடிகை பாயல் பேசுகையில் நான் வெறும் கதாபாத்திரத்தை மட்டும்தான் ஏற்று நடித்தேன். என்னுடைய நிஜ வாழ்க்கையிலும் அதே மாதிரி தான் இருப்பேன் என்பதை நீங்கள் தீர்மானிக்க கூடாது என்று கூறினார்.

மக்கள் மனதில் இந்து என்ற கதாபாத்திரத்தை அழிக்கத்தான் நான் போராடுகிறேன். மேலும் எதிர்காலத்தில் வரவிருக்கும் படங்களான டிஸ்கோ ராஜா மற்றும் வெங்கி மாமா ஆகியவற்றில் தைரியமாக இருப்பதைத் தவிர்த்துவிட்டு புதிய கதாபாத்திரங்களை ஏற்று நான் நடிக்க உள்ளேன் என்று கூறினார்.